நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செரியானில் நிலவும் புகைமூட்டம்: பேரிடர் அவசரநிலையைப் பிரகடனப்படுத்த சரவாக் அரசு கோரிக்கை 

கூச்சிங்: 

சரவாக், செரியானில்  புகைமூட்டத்தின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு பேரிடர் அவசரநிலையை பிரகடனம் செய்யுமாறு கூட்டரசு அரசாங்கத்தை சரவாக் மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

செரியானில் காற்று தூய்மைக்கேடு குறியீடு (API) இன்று பிற்பகல் 3.55 மணி அளவில் 519 என்ற ஆபத்தான அளவை எட்டியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சரவாக் பிரிமியர் அபாங் ஜொஹாரி துன் ஒபேங் , நாட்டின் பிரதமர் அன்வார் இப்ராஹிமுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசி வருவதாகச் சரவாக் துணைப் பிரிமியர் டக்ளஸ் உக்கா எம்பாஸ் தெரிவித்தார்.

இக்கட்டான இந்தச் சூழலைக் கையாள இரு தலைவர்களும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

அவசரநிலையை பிரகடனம் செய்யும் அதிகாரம் புத்ராஜெயாவிற்கு மட்டுமே உள்ளது என்பதை டக்ளஸ் உக்கா தெளிவுபடுத்தினார். இந்த அவசரநிலை உத்தரவில் நாட்டின் பேரரசர் கையொப்பமிட வேண்டும் என்பதால் கூட்டரசு அரசின் தலையீடு அவசியமாகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset