செய்திகள் மலேசியா
மீபா இளையோர் கால்பந்து போட்டி; பெட்டாலிங் மாவட்ட கால்பந்து அணி வெற்றியுடன் திரும்பும்: பத்துமலை
சுபாங்ஜெயா:
மீபா இளையோர் கால்பந்து போட்டியில் பெட்டாலிங் மாவட்ட கால்பந்து அணி வெற்றியுடன் திரும்பும்.
அச்சங்கத்தின் தலைவர் பத்துமலை இதனை கூறினார்.
மீபா எனப்படும் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தின் இளையோர் கால்பந்து போட்டி வரும் செப்டம்பர் 5ஆம் தேதி பினாங்கு பாடாங் போலா அரங்கில் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இந்த போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார்.
மாலையில் சிறப்பு வருகை தரும் பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ராஜூ வெற்றி பெறும் குழுக்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்குவார்.
இந்த போட்டியில் பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் அணி ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளில் பங்கேற்கிறது.
பெட்டாலிங் ஜெயா கால்பந்து சங்கத்தின் தலைவர் பத்துமலை, துணை தலைவர்கள் கென்னத் கண்ணா, குணா ஆகியோர் தலைமையில் இன்று சிலாங்கூர் குழுவுக்கு கொடி வழங்கும் வைபவம் நடைபெற்றது.
சிலாங்கூர் கல்பந்து சங்கத்தின் செயலாளர் ஈஸ்ரின் நபில், உதவித் தலைவர் சேகர் சந்திரன் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
பினாங்கில் நடைபெறும் மீபா கால்பந்து போட்டியில் பெட்டாலிங் மாவட்ட கால்பந்து அனி சாம்பியன் பட்டத்தை வெல்ல போராடும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிலாங்கூர் குழு சாம்பியன்.
ஆகவே சாம்பியன் பட்டத்தை வென்று வெற்றியோடு திரும்பும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் சிலாங்கூர் கால்பந்து அணியின் அதிகாரப்பூர்வ பேருந்தில் தான் பெட்டாலிங் அணி போட்டிக்கு சென்றுள்ளது.
இதற்கு உறுதுணையாக இருந்த எப்ஏஎஸ் உதவித் தலைவர் டத்தோ சுகுவிற்கு நன்றி.
குறிப்பாக மீபா போட்டியில் பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கம் நேரடியாக பங்கேற்க வாய்ப்பு வழங்கிய மீபா தலைவர் அன்பானந்தன், துணைத் தலைவர் ராஜன் ஆகியோருக்கும் நன்றி என்று பத்துமலை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 4, 2026, 5:27 pm
சரவாக் செரியான் வட்டாரத்தில் மாமன்னர் அவசர நிலையை அறிவித்தார்
September 4, 2026, 5:26 pm
ஆலய இடிப்புப் போராட்டத்திற்குப் பின்னணியில் இருந்த ஆர்வலர் கைது செய்யப்பட்டார்
September 4, 2026, 5:26 pm
தேசிய முன்னணி தலைவர்கள் மீதான குற்றச்சாட்டுகளின் காலத்தைப் பற்றி கைரி, ஷாரில் கேள்வி எழுப்பியுள்ளனர்
September 4, 2026, 5:25 pm
ஜாகர்த்தாவிற்கு போதைப்பொருள் கடத்தல் வழக்கு: துணை விமானியின் நண்பர் வெளிநாடு தப்பினார்
September 4, 2026, 5:21 pm
செரியானில் நிலவும் புகைமூட்டம்: பேரிடர் அவசரநிலையைப் பிரகடனப்படுத்த சரவாக் அரசு கோரிக்கை
September 4, 2026, 3:59 pm
எம்.ஏ.சி.சி விசாரணைக்கு உதவுபவர்களுக்கு ஆரஞ்சு நிற ஆடை அணிய தேவையில்லை: பிரதமர் அன்வார் விளக்கம்
September 4, 2026, 3:51 pm
புக்கிட் மெர்தாஜாமில் துப்பாக்கி சூடு சம்பவம்: இரு சந்தேக நபர்களைப் போலிஸ் தேடி வருகிறது
September 4, 2026, 3:49 pm
