நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புக்கிட் மெர்தாஜாமில் துப்பாக்கி சூடு சம்பவம்: இரு சந்தேக நபர்களைப் போலிஸ் தேடி வருகிறது 

புக்கிட் மெர்தாஜாம்: 

நேற்று மாச்சாங் பூபோக், புக்கிட் மெர்தாஜாமில் துப்பாக்கி சூடு சம்பவம்  நிகழ்ந்ததைத் தொடர்ந்து இரு சந்தேக நபர்களைப் போலிஸ் தேடி வருகிறது 

இந்த அதிர்ச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் அதிர்ஷ்டவசமாக உயிருடன் தப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரு நபர்கள் திடீரெனத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான பாதிக்கப்பட்ட நபர், ஆபத்திலிருந்து தப்பிக்க அருகில் இருந்த சீன மயானத்தை நோக்கி ஓடியதாகக் கூறப்படுக்கிறது.

இச்சம்பவம் தொடர்பில் பிற்பகல் 2.05 மணியளவில் புகார் பெறப்பட்டதாகச் செபராங் பிறை தெங்கா மாவட்டப் போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஷனர் நிக் அமீனுடின் ராஜா அப்துல்லா தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர்களில் ஒருவன் பாதிக்கப்பட்டவரை நோக்கிச் சுட்டதைத் தொடர்ந்து, இருவரும் சம்பவ இடத்திலிருந்து உடனடியாகத் தப்பிச் சென்றுவிட்டதாக அவர் ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட நபரின் வலது உள்ளங்கையில் எலும்பு முறிவு மற்றும் தீவிரக் காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தற்போது சீரான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

அத்துடன், சம்பவம் நடந்த இடத்தில் தீவிர சோதனை மேற்கொண்ட காவல்துறையினர், விசாரணைக்குத் தேவையான சில முக்கியப் பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர்.

தற்போது இச்சம்பவம் குறித்து தண்டனைச் சட்டம் பிரிவு 307-இன் கீழ் கொலை முயற்சி வழக்காகப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset