செய்திகள் மலேசியா
ஜாகர்த்தாவிற்கு போதைப்பொருள் கடத்தல் வழக்கு: துணை விமானியின் நண்பர் வெளிநாடு தப்பினார்
ஷாஆலம்:
இந்தோனேசியாவில் மலேசிய துணை விமானி சம்பந்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களில் நால்வர், 39 வயதான அந்த நபரின் கைது பற்றி அறிந்த பிறகு வெளிநாடு தப்பிச் சென்றனர்.
கடந்த ஜூலை 28 அன்று சோகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையத்தில் துணை விமானி கைது செய்யப்பட்டதை அறிந்த பிறகு, அந்த நான்கு சந்தேக நபர்களும் தாய்லாந்து மற்றும் வியட்நாமிற்கு தப்பிச் சென்றது கண்டறியப்பட்டது.
இருப்பினும், ஆறு சந்தேக நபர்களும் ஆகஸ்ட் 20 முதல் 28க்குள் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் குற்ற புலானாய்வு துறை இயக்குனர் டத்தோ ஹுசைன் உமர் கான் கூறினார்.
கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களில், நால்வர் வெளிநாடு தப்பிச் சென்றனர். இருவர் தாய்லாந்திற்கும், இருவர் வியட்நாமிற்கும் தப்பிச் சென்றனர்.
தாய்லாந்துக்குத் தப்பிச் சென்ற இரண்டு சந்தேக நபர்கள், கெடா மாநிலம், லங்காவி, குவாவில் படகு மூலம் மலேசியா திரும்பிக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டனர்.
வியட்நாமுக்குத் தப்பிச் சென்ற மேலும் இரண்டு சந்தேக நபர்கள் பாயான் லெப்பாஸில் உள்ள பினாங்கு சர்வதேச விமான நிலையம் வழியாக மலேசியா திரும்பிக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டனர்.
மீதமுள்ள இரண்டு சந்தேக நபர்கள் முறையே பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம், சிலாங்கூர், கிள்ளானில் கைது செய்யப்பட்டனர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 4, 2026, 5:27 pm
சரவாக் செரியான் வட்டாரத்தில் மாமன்னர் அவசர நிலையை அறிவித்தார்
September 4, 2026, 5:26 pm
ஆலய இடிப்புப் போராட்டத்திற்குப் பின்னணியில் இருந்த ஆர்வலர் கைது செய்யப்பட்டார்
September 4, 2026, 5:26 pm
தேசிய முன்னணி தலைவர்கள் மீதான குற்றச்சாட்டுகளின் காலத்தைப் பற்றி கைரி, ஷாரில் கேள்வி எழுப்பியுள்ளனர்
September 4, 2026, 5:21 pm
செரியானில் நிலவும் புகைமூட்டம்: பேரிடர் அவசரநிலையைப் பிரகடனப்படுத்த சரவாக் அரசு கோரிக்கை
September 4, 2026, 3:59 pm
எம்.ஏ.சி.சி விசாரணைக்கு உதவுபவர்களுக்கு ஆரஞ்சு நிற ஆடை அணிய தேவையில்லை: பிரதமர் அன்வார் விளக்கம்
September 4, 2026, 3:51 pm
புக்கிட் மெர்தாஜாமில் துப்பாக்கி சூடு சம்பவம்: இரு சந்தேக நபர்களைப் போலிஸ் தேடி வருகிறது
September 4, 2026, 3:49 pm
16ஆவது பொதுத்தேர்தல் முன்கூட்டியே நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்
September 4, 2026, 3:46 pm
