நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

16ஆவது பொதுத்தேர்தல் முன்கூட்டியே நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

கோலாலம்பூர்:

16ஆவது பொதுத்தேர்தலை முன்கூட்டியே நடத்துவது தொடர்பான கோரிக்கையை அரசு பரிசீலனை செய்யும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். 

முறையான வகையில் முடிவுகள் எடுத்த பிறகு மாட்சிமை தங்கிய மாமன்னர் ஒப்புதலுக்கு முன்வைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். 

தற்போது நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல், மக்களின் வாழ்வாதாரத்தையும் நலனையும் உறுதி செய்தல் ஆகியவைதான் கூட்டரசு அரசாங்கத்தின் முதன்மை இலக்காகும் என அன்வார் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், லஞ்ச ஒழிப்பு மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகத்திற்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதே அரசின் தற்போதைய முக்கிய கவனமாக உள்ளது.

முன்னதாக, 16ஆவது பொதுத்தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்று அம்னோ தேசிய தலைவர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி கேட்டுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நாட்டின் 15ஆவது நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் 2027ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவடைகின்றது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், 60 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset