நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மெஸ்ஸிக்கு அர்ஜெண்டினா சிறப்பு மரியாதையை செலுத்துகிறது

போனஸ் அயர்ஸ்:

இந்த வார இறுதியில் அர்ஜெண்டினாவில் நடைபெறும் அனைத்து கால்பந்து போட்டிகளும், லியோனல் மெஸ்ஸியைக் கௌரவிக்கும் விதமாக, 10ஆவது நிமிடத்தில் 60 வினாடிகள் கைதட்டலுக்காக நிறுத்தப்படும்.

தேசிய அணியிலிருந்து ஓய்வு பெறுவதாக மெஸ்ஸி திங்களன்று அறிவித்ததைத் தொடர்ந்து, அர்ஜெண்டினா கால்பந்து சங்கம்  இந்த சிறப்பு மரியாதையை அறிவித்துள்ளது.

39 வயதான மெஸ்ஸி, அர்ஜெண்டினா அணிக்காக விளையாடும்போது 10ஆம் எண் ஜெர்சியுடனே மிகவும் அறியப்படுகிறார்.

தனது சர்வதேச விளையாட்டு வாழ்க்கை முழுவதும் 'லா அல்பிசெலெஸ்டே' அணியின் முக்கிய சின்னமாக அவர் திகழ்கிறார்.

ஆண்கள், பெண்கள் இருபாலருக்குமான அனைத்துப் பிரிவுகள் மற்றும் விளையாட்டுத் துறைகள் சார்ந்த வரவிருக்கும் போட்டிகளில், அர்ஜெண்டினா தேசிய அணியுடனான லியோனல் மெஸ்ஸியின் விளையாட்டு வாழ்க்கையை அங்கீகரிக்கும் விதமாக, முதல் பாதியின் 10ஆவது நிமிடத்தில் ஒரு நிமிடக் கைதட்டலுக்காக ஆட்டங்கள் நிறுத்தப்படும் என்று அர்ஜெண்டினா கால்பந்து சங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset