செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் மாநில இந்திய சமூகத்தின் விவகாரங்களுக்கு முன்னுரிமை அளிப்பேன்: டத்தோ விஎஸ் மோகன்
சிரம்பான்:
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் இந்திய சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு முக்கியத்துவம் வழங்கி அந்த பிரச்சனைகளை களைவதற்கான நடவடிக்கை மேற்க்கொள்வேன்.
நெகிரி செம்பிலான் மந்திரி புசாரின் இந்தியச் சமூக விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரி (ஆட்சிக்குழு உறுப்பினர் அந்தஸ்து) பதவி பிராமணத்திற்கு பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த டத்தோ விஎஸ் மோகன் இதனை கூறினார்.
விஸ்மா நெகிரியில் நெகிரி செம்பிலான் மாநில மந்திரி புசார் டத்தோ இஸ்மாயில் லாசிம் தலைமையில் நெகிரி செம்பிலான் மாநில அரசாங்க செயலாளர் டத்தோ முகமட் ஜாபிர் இப்ராஹிம் முன்னிலையில் அவர் பதவியேற்று கொண்டார்.
இந்திய சமுகம் குறிப்பாக ஆலய நிலப் பிரச்சினை, தமிழ்ப்பள்ளிளின் நிலப் பிரச்சினை, இந்தியர்களின் நலன்சார்ந்த பல்வேறு இந்திய சமுகத்தின் பிரச்சனைக்கு முக்கியத்துவம் வழங்கி அந்த பிரச்சனைகளை மாநில மந்திரி புசார் கவனத்திற்கு கொண்டுச் சென்று பிரச்சனைகளை தீர்வு காண்பதற்கான அனைத்து நடவடிக்கையும் மேற்கோள்வேன்.
மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ விக்னேஸ்வரன், துனைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் ஆகியோர் என் மீது நம்பிக்கை வைத்து இந்த பதவிக்கு சிபாரிசு செய்துள்ளனர்.
அவர்களுக்கு என் நன்றியை தெரிவிக்கும் வகையில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் இந்தியர்களின் பிரச்சனைக்கு முக்கியத்துவம் வழங்கி அந்த பிரச்சனைகளை தீர்வு காண்பதற்கு மாநில அரசாங்கத்துடன் இணைந்து நடவடிக்கை மேற்க்கொள்வேன் என்று டத்தோ விஎஸ் மோகன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 22, 2026, 11:18 am
மலாக்கா மாநில சட்டமன்றம் இன்று கலைக்கப்படுகிறதா?
September 22, 2026, 11:04 am
மெகா iLINDUNGu விழாவின் வாயிலாக 523 பேர் நேர்காணல் தேர்வின் தேர்ச்சிக்கு பின் வெற்றிகரமாக வேலையை பெற்றனர்: பெர்கேசோ
September 22, 2026, 11:03 am
குருவிமலை ஸ்ரீ மகா காளியம்மன், ஏழு கன்னிகள் ஆலயத்திற்கு நிரந்த நிலம்; பல ஆண்டுகால கோரிக்கைக்கு தீர்வு: பாக்கியநாதன்
September 22, 2026, 9:28 am
ஹூத்தி தாக்குதல்கள்: சவூதி அரேபியாவுக்கு மலேசியா துணை நிற்கும்
September 22, 2026, 9:27 am
வாங்சாமாஜூ எல்ஆர்டி ரயில் நிலைய தண்டவாளத்தில் பயணி மயங்கி விழுந்தார்
September 22, 2026, 9:26 am
