நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டியூசன் மையங்களுக்கு 30 சதவீத பூமிபுத்ரா பங்குரிமைத் தேவையை கல்வியமைச்சு கைவிடுகிறது

புத்ராஜெயா:

தனியார் கல்வி நிறுவனங்களால் நடத்தப்படும் டியூசன் மையங்களுக்கு குறைந்தபட்சம் 30 சதவீத பூமிபுத்ரா பங்குரிமையைக் கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை இனி கல்வியமைச்சு விதிக்காது.

கல்வித் துறையின் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப தனியார் கல்வி நிறுவனங்களின் பங்குரிமைத் தேவைகள் இருப்பதை உறுதி செய்வதற்காக, முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சுடன் நடத்திய கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இந்த மாற்றம் முடிவு செய்யப்பட்டதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இரு அமைச்சுகளுக்கும் இடையே நடந்த கலந்துரையாடல் அமர்வைத் தொடர்ந்து, கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு, குறைந்தபட்சம் 30 சதவீத பூமிபுத்ரா பங்குரிமை இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இனி தேவைப்படாது.

இந்த நிபந்தனை, குறிப்பாக தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் சில குறிப்பிட்ட கல்வித் திட்டங்களுக்கு, 2006-ல் வெளியிடப்பட்ட கல்வித் திட்டக் கொள்கை அறிக்கை புத்தகத்தில் முன்னர் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மாற்றம் கல்வித் துறையின் தற்போதைய தேவைகளைக் கருத்தில் கொள்வதோடு, இத்துறையில் பங்கேற்பதற்கான வாய்ப்பு அனைத்துத் தரப்பினருக்கும் திறந்திருப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கல்வியமைச்சு கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset