செய்திகள் மலேசியா
ஒரு வருடம் மட்டுமே பணியாற்றி விபத்தில் உயிரிழந்த பதின்ம வயதினரின் வாரிசுகள் பெர்கேசோவின் LINDUNG 24 உதவித் தொகையைப் பெறத் தகுதியுடையவர்கள்
கோலாலம்பூர்:
ஒரு வருடம் மட்டுமே பணியாற்றி விபத்தில் உயிரிழந்த பதின்ம வயதினரின் வாரிசுகள் பெர்கேசோவின் LINDUNG 24 உதவித் தொகையைப் பெறத் தகுதியுடையவர்கள்.
கடந்த வாரம் பேரா ஈப்போவில் உள்ள ஜாலான் ஜெலபாங்-அம்பாங் சாலையில் 12 மோட்டார் சைக்கிள்கள், மூன்று கார்கள் மோது விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் உயிரிழந்த இரண்டு பதின்ம வயதினரின் வாரிசுகள், சுமார் ஒரு வருடமாக மட்டுமே பணியாற்றிய போதிலும், LINDUNG 24 மணி நேரப் பலன்களைப் பெறத் தகுதியுடையவர்கள்.
பதிவுகளின் அடிப்படையில், காலஞ்சென்ற இஸ்திஹார் ரபிக் இந்த ஆண்டு ஜனவரியில் பணியில் சேர்ந்தபோது பங்களிக்கத் தொடங்கினார் என்று பெர்கேசோ கூறியது.
மேலும் அதே சம்பவத்தில் உயிரிழந்த அவரது நண்பரான முஹம்மது ஃபைஸ்.கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் பணியாற்றி வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவருக்கும் 19 வயது.
வேலை நேரத்திற்கு வெளியே விபத்து நடந்திருந்தாலும், இறந்தவரை இதற்கு முன்பு சார்ந்திருந்த வாரிசுகளான, பாதிக்கப்பட்டவரின் பெற்றோர், உடன்பிறப்புகளின் நிலை பாதுகாக்கப்பட்டுள்ளது.
இதுவே 24 மணி நேர பாதுகாப்பு திட்டத்தின் உண்மையான நோக்கமாகும்
ஏனெனில், ஒரு ஊழியர் சமீபத்தில்தான் பெர்கேசோவிற்கு பங்களிக்கத் தொடங்கியிருந்தாலும், அலுவலக நேரத்திற்கு வெளியே விபத்துகள் ஏற்படும்போது அது உயிர்வாழ்வதற்கான உத்தரவாதத்தை வழங்குகிறது.
ஒரு அன்புக்குரியவரை இழப்பதற்கு மாற்று எதுவும் இல்லை. ஆனால் குறைந்தபட்சம் இறந்தவர் பெர்கேசோ சலுகைகள் மூலம் ஒரு சேவையை விட்டுச் சென்றுள்ளார்.
அது தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு கிடைக்கிறது என்று பெர்கேசோ ஓர் அறிக்கையில் கூறியது.
மறைந்த முஹம்மது இஸ்திஹாரின் வாரிசுகள், தத்தமது பங்குகளுக்கு ஏற்ப 945 ரிங்கிட் சார்ந்தோர் உதவித் தொகையைப் பெறத் தகுதியுடையவர்கள்.
அவரது பெற்றோர் வாழ்நாள் முழுவதும் இந்தத் தொகையைப் பெறுவார்கள் என்றும், இறந்தவரின் மூன்று உடன்பிறப்புகள் 21 வயதை அடையும் வரை அல்லது தங்கள் பட்டப்படிப்பை முடிக்கும் வரை அதே உதவித் தொகையைப் பெறுவார்கள்.
காலஞ்சென்ற முஹம்மது ஃபைஸைப் பொறுத்தவரை, இறுதிச் சடங்குக்கான இழப்பீட்டுத் தொகையான 891 ரிங்கிட், அவரவர் பங்குகளுக்கு ஏற்ப, அவரது பெற்றோருக்கு வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.
அதே சமயம், இறந்தவரின் உடன்பிறந்தவர்களில் ஒருவர், அவருக்கு 21 வயது ஆகும் வரை அல்லது பட்டப்படிப்பை முடிக்கும் வரை இதே பலனைப் பெறுவார்.
கூடுதலாக, பாதிக்கப்பட்டவரின் இரு வாரிசுகளும் இறுதிச் சடங்கு மேலாண்மைப் பலனாக 3,000 ரிங்கிட்டை மொத்தத் தொகையாகப் பெறத் தகுதியுடையவர்கள் என்று பெர்கேசோ கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 22, 2026, 11:18 am
மலாக்கா மாநில சட்டமன்றம் இன்று கலைக்கப்படுகிறதா?
September 22, 2026, 11:04 am
மெகா iLINDUNGu விழாவின் வாயிலாக 523 பேர் நேர்காணல் தேர்வின் தேர்ச்சிக்கு பின் வெற்றிகரமாக வேலையை பெற்றனர்: பெர்கேசோ
September 22, 2026, 11:03 am
குருவிமலை ஸ்ரீ மகா காளியம்மன், ஏழு கன்னிகள் ஆலயத்திற்கு நிரந்த நிலம்; பல ஆண்டுகால கோரிக்கைக்கு தீர்வு: பாக்கியநாதன்
September 22, 2026, 9:28 am
ஹூத்தி தாக்குதல்கள்: சவூதி அரேபியாவுக்கு மலேசியா துணை நிற்கும்
September 22, 2026, 9:27 am
வாங்சாமாஜூ எல்ஆர்டி ரயில் நிலைய தண்டவாளத்தில் பயணி மயங்கி விழுந்தார்
September 22, 2026, 9:26 am
