நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழ்ப்பள்ளிகளுக்கு தங்களால் முடிந்த பங்களிப்புகளை வழங்குவதை முன்னாள் மாணவர்கள் கடமையாக கொண்டிருக்க வேண்டும் : தங்கராஜா

ரவூப்:

தமிழ்ப்பள்ளிகளுக்கு தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்குவதை முன்னாள் மாணவர்கள் கடமையாக கொண்டிருக்க வேண்டும்.

கிள்ளான் மாநகர் மன்ற உறுப்பினர்  தங்கராஜா இதனை வலியுறுத்தினார்.

ரவூப் தமிழ்ப்பள்ளியின் நான் கல்வி பயின்றேன்.

இப்பள்ளியின் முன்னாள் மாணவர் என்ற என்னால் முடிந்த பங்களிப்புகளை இப்பள்ளிக்கு செய்து வருகிறேன்.

இந்நிலையில் தான் பள்ளியில் எல்இடி ஸ்க்ரின் பொருத்த வேண்டும் என பள்ளியின் தலைமையாசிரியர் தமிழ்வாணன் என்னிடம் கூறினார்.

அவரின் கோரிக்கைக்கு இணங்க பல நல்லுள்ளங்களின் ஆதரவுடன் இன்று எல்இடி ஸ்க்ரின் பள்ளியில் பொருத்தப்பட்டுள்ளது.

என்னுடைய இம்முயற்சி உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் தமிழ்ப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் இன்று வெளியில் வெற்றியாளர்களாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார்கள்.

இம்மாணவர்கள் அனைவரும் தங்களால் முடிந்த பங்களிப்புகளை தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்க வேண்டும்.

பணம், பொருளை தவிர்த்து நேரமாக இருந்தாலும் அது பள்ளிக்கு பெரும் பயனாக இருக்கும் என தங்கராஜா வலியுறுத்தினார்.


இதனிடையே பகாங் மாநிலத்தில் இந்த எல்இடி ஸ்க்ரின் பொருத்தப்பட்ட இரண்டாவது தமிழ்ப்பள்ளியாக ரவூப் தமிழ்ப்பள்ளி விளங்குகிறது.

இதற்கு காரணமாக இருந்த தங்கராஜா உட்பட அனைவருக்கும் நன்றி என்று தலைமையாசிரியர் தமிழ்வாணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset