செய்திகள் மலேசியா
குருவிமலை ஸ்ரீ மகா காளியம்மன், ஏழு கன்னிகள் ஆலயத்திற்கு நிரந்த நிலம்; பல ஆண்டுகால கோரிக்கைக்கு தீர்வு: பாக்கியநாதன்
தம்புன்:
பல ஆண்டுகளாக நிலவி வந்த குருவிமலை மகாகாளியம்மன், ஏழு கன்னிகள் ஆலயத்தின் நிலப் பிரச்சினைக்கு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசனின் தொடர் முயற்சியின் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது.
80 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இவ்வாலயம், இப்பகுதியில் இந்தியர்கள் குவாரிகளில் பணியாற்றிய காலகட்டத்தில் அவர்களின் வழிபாட்டுக்காக உருவாக்கப்பட்டதாக ஆலயத் தலைவர் பாக்கியநாதன் ரங்கநாதன் தெரிவித்தார்.
1970ஆம் ஆண்டுகளில் இப்பகுதியில் குடியிருப்புகள் உருவாக்கப்பட்டபோது ஆலயம் மீண்டும் கட்டப்பட்டது.
அதன் பின்னர் ஆலயத்துக்கான நிலத்தை அரசாங்கத்திடமிருந்து அதிகாரப்பூர்வமாகப் பெறுவதற்காக பல ஆண்டுகளாக பலமுறை விண்ணப்பங்கள் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
ஆனால், ஆலய நிலம் தொடர்பான விண்ணப்பங்கள் பலமுறை நிராகரிக்கப்பட்ட நிலையில், ஆலய நிர்வாகம் தனது நீண்டகாலப் பிரச்சினையை இந்திய விவகாரங்களுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ சிவநேசனிடம் நேரடியாக முன்வைத்ததாக பாக்கியநாதன் தெரிவித்தார்.
இதையடுத்து, டத்தோ சிவநேசன் சம்பந்தப்பட்ட நில அலுவலக அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, அதிகாரிகளை நேரடியாக ஆலயத்துக்கு அழைத்து வந்து நிலைமைகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
டத்தோ சிவநேசனின் தொடர் முயற்சியின் பயனாக தற்போது இந்த ஆலயத்திற்கு 0.8 ஏக்கர. நிலம் கிடைத்துள்ளதாகவும், இது ஆலய நிர்வாகம் மற்றும் பக்தர்களின் பல ஆண்டுகால கோரிக்கைக்கு கிடைத்த முக்கியமான தீர்வாக அமைந்துள்ளதாகவும் பாக்கியநாதன் கூறினார்.
பல ஆண்டுகளாக எங்களின் கோரிக்கைக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என எதிர்பார்த்து வந்தோம்.
தற்போது ஆலயத்துக்கான நிலம் கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
எங்களின் பிரச்சினையை நேரில் கேட்டறிந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வைப் பெற்றுத்தந்த டத்தோ அ. சிவநேசனுக்கு ஆலய நிர்வாகம், பக்தர்கள் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 22, 2026, 11:18 am
மலாக்கா மாநில சட்டமன்றம் இன்று கலைக்கப்படுகிறதா?
September 22, 2026, 11:04 am
மெகா iLINDUNGu விழாவின் வாயிலாக 523 பேர் நேர்காணல் தேர்வின் தேர்ச்சிக்கு பின் வெற்றிகரமாக வேலையை பெற்றனர்: பெர்கேசோ
September 22, 2026, 9:28 am
ஹூத்தி தாக்குதல்கள்: சவூதி அரேபியாவுக்கு மலேசியா துணை நிற்கும்
September 22, 2026, 9:27 am
வாங்சாமாஜூ எல்ஆர்டி ரயில் நிலைய தண்டவாளத்தில் பயணி மயங்கி விழுந்தார்
September 22, 2026, 9:26 am
