செய்திகள் மலேசியா
ஹூத்தி தாக்குதல்கள்: சவூதி அரேபியாவுக்கு மலேசியா துணை நிற்கும்
புத்ராஜெயா:
சவூதி அரேபிய அரசாங்கத்திற்கு மலேசியா துணை நிற்பதோடு, பொதுமக்கள், பொது உள்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்ட தாக்குதல்கள் உட்பட, அரசாங்கத்தின் மீதான ஹூத்தி தாக்குதல்களை வண்மையாகக் கண்டிக்கிறது.
வெளியுறவு அமைச்சு ஒர் அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சாசனம், சர்வதேச சட்டத்திற்கு இணங்க, சவூதி அரேபியா தனது இறையாண்மை, வட்டார ஒருமைப்பாடு, அதன் மக்களின் பாதுகாப்பைப் பேணுவதற்கான முயற்சிகளை மலேசியா ஆதரிக்கிறது.
பதட்டங்களைத் தணிப்பதற்கும், மோதலுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைப்பதற்குமான அனைத்து முயற்சிகளையும் மலேசியா ஆதரிக்கிறது.
சவூதி அரேபிய அரசாங்கத்துடனான நீண்டகால ஒத்துழைப்பை மலேசியா பெரிதும் பாராட்டுகிறது.
மேலும் இரு நாடுகளின் பரஸ்பர நலன்களுக்காக இந்த ஒத்துழைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்த உறுதி கொண்டுள்ளது என்று அந்த அறிக்கை கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 22, 2026, 11:04 am
மெகா iLINDUNGu விழாவின் வாயிலாக 523 பேர் நேர்காணல் தேர்வின் தேர்ச்சிக்கு பின் வெற்றிகரமாக வேலையை பெற்றனர்: பெர்கேசோ
September 22, 2026, 11:03 am
குருவிமலை ஸ்ரீ மகா காளியம்மன், ஏழு கன்னிகள் ஆலயத்திற்கு நிரந்த நிலம்; பல ஆண்டுகால கோரிக்கைக்கு தீர்வு: பாக்கியநாதன்
September 22, 2026, 9:27 am
வாங்சாமாஜூ எல்ஆர்டி ரயில் நிலைய தண்டவாளத்தில் பயணி மயங்கி விழுந்தார்
September 22, 2026, 9:26 am
டியூசன் மையங்களுக்கு 30 சதவீத பூமிபுத்ரா பங்குரிமைத் தேவையை கல்வியமைச்சு கைவிடுகிறது
September 21, 2026, 9:24 pm
