நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வாங்சாமாஜூ எல்ஆர்டி ரயில் நிலைய தண்டவாளத்தில் பயணி மயங்கி விழுந்தார்

கோலாலம்பூர்:

இன்று காலை வாங்சாமாஜூ நிலையத்தில் எல்ஆர்டி ரயுல் தண்டவாளத்தில் பயணி ஒருவர் மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது.

காலை சுமார் 6.25 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தால், கிளானா ஜெயா வழித்தட சேவைகளில் லேசான தாமதம் ஏற்பட்டதாக ரேபிட் கேஎல் நிறுவனம் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கையாக நடைமேடை ஊடுருவல் அவசரகால நிறுத்த அமைப்பு செயல்படுத்தப்பட்டு, மின் விநியோகம் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டது.

சம்பவத்தில் ஈடுபட்ட பயணி, பின்னர் நிலைய ஊழியர்களால் தண்டவாளப் பகுதியிலிருந்து வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டார்.

முதற்கட்ட சிகிச்சைக்காக அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இருப்பினும், அந்த அறிக்கை பயணியின் உடல்நிலை, அவருக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்து வெளியிடவில்லை என்று அந்த அறிக்கை தெரிவித்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset