செய்திகள் மலேசியா
மலாக்கா மாநில சட்டமன்றம் இன்று கலைக்கப்படுகிறதா?
மலாக்கா:
மலாக்கா மாநிலத் தேர்தலுக்கு வழிவகுக்கும் வகையில், மலாக்கா முதலமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் ரவுஃப் யூசோ, இன்று பிற்பகல் 3 மணிக்கு ஸ்ரீ நெகிரி வளாகத்தில் மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவதை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் புதன்கிழமை நடைபெறவிருந்த மாநில ஆட்சிக் குடு கூட்டம், இன்று நண்பகல் 12 மணிக்கு முன்கூட்டியே நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இதனால் மலாக்கா மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவது குறித்த யூகங்கள் தீவிரமடைந்து வருகின்றன.
தகவல்களின்படி, அப்துல் ரவுஃப் செயற்குழு கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பிறகு, பிற்பகல் 2 மணிக்கு ஸ்ரீ நெகிரி அரங்கத்தில் நடைபெறும் ஆட்சிக் குழுவிற்கு பிந்தைய கூட்டத்தில் கலந்துகொள்வார்.
தேசிய முன்னணி மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் பிற்பகல் 2.30 மணிக்கு ஸ்ரீ நெகிரியில் கலந்துகொள்ளுமாறு அழைப்புக் கடிதம் நேற்று விநியோகிக்கப்பட்டதாகவும் அறியப்படுகிறது.
மேலும், மாநில சட்டமன்றத்தைக் கலைக்கும் கடிதத்தில் மாலாக்கா மாநில ஆளுநத் துன் முகமது அலி முகமது ருஸ்தாம் ஜப்பானுக்குப் புறப்படுவதற்கு முன்பு கையெழுத்திட்டதாக அந்தத் தகவல் தெரிவித்தது.
இருப்பினும், மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 22, 2026, 11:04 am
மெகா iLINDUNGu விழாவின் வாயிலாக 523 பேர் நேர்காணல் தேர்வின் தேர்ச்சிக்கு பின் வெற்றிகரமாக வேலையை பெற்றனர்: பெர்கேசோ
September 22, 2026, 11:03 am
குருவிமலை ஸ்ரீ மகா காளியம்மன், ஏழு கன்னிகள் ஆலயத்திற்கு நிரந்த நிலம்; பல ஆண்டுகால கோரிக்கைக்கு தீர்வு: பாக்கியநாதன்
September 22, 2026, 9:28 am
ஹூத்தி தாக்குதல்கள்: சவூதி அரேபியாவுக்கு மலேசியா துணை நிற்கும்
September 22, 2026, 9:27 am
வாங்சாமாஜூ எல்ஆர்டி ரயில் நிலைய தண்டவாளத்தில் பயணி மயங்கி விழுந்தார்
September 22, 2026, 9:26 am
