செய்திகள் மலேசியா
சுற்றுலா விசா & 30 நாள் விசா இல்லாத நுழைவைக் கொண்டு நாட்டில் வேலை தேடும் இந்திய நாட்டவர்கள்: இந்திய தூதரகம் எச்சரிக்கை
கோலாலம்பூர்:
மலேசியாவிற்கு சுற்றுலா விசா, 30 நாள் விசா இல்லாத நுழைவு வசதியைப் பயன்படுத்தி வேலை தேடி வரும் இந்தியக் குடிமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது
சுற்றுலா விசாவில் மலேசியாவுக்கு வந்துவிட்டு, முறையற்ற வேலைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய தூதரகம் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.
சுற்றுலா மற்றும் சமூகப் பயணங்களுக்கு மட்டுமே இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு 30 நாள் விசா இல்லாத அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவின் குடியேற்ற விதிகளை மீறும் இந்தச் செயல்கள் கடுமையான குற்றமாகும் என்று இந்திய தூதரகம் தெரிவித்தது.
இந்திய நாட்டு பயணிகள் அனைவரும் உறுதிப்படுத்தப்பட்ட திரும்பும் விமான டிக்கெட், தங்கும் விடுதி முன்பதிவு மற்றும் வருகைத் தேதிக்கு 3 நாட்களுக்கு முன்பாக மலேசிய டிஜிட்டல் வருகை அட்டை இயங்கலை சமர்ப்பிப்பு போன்ற செல்லுபடியாகும் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.
மேலும், குறைந்தபட்சம் 6 மாத கால செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டை பயணிகள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 22, 2026, 11:18 am
மலாக்கா மாநில சட்டமன்றம் இன்று கலைக்கப்படுகிறதா?
September 22, 2026, 11:04 am
மெகா iLINDUNGu விழாவின் வாயிலாக 523 பேர் நேர்காணல் தேர்வின் தேர்ச்சிக்கு பின் வெற்றிகரமாக வேலையை பெற்றனர்: பெர்கேசோ
September 22, 2026, 11:03 am
குருவிமலை ஸ்ரீ மகா காளியம்மன், ஏழு கன்னிகள் ஆலயத்திற்கு நிரந்த நிலம்; பல ஆண்டுகால கோரிக்கைக்கு தீர்வு: பாக்கியநாதன்
September 22, 2026, 9:28 am
ஹூத்தி தாக்குதல்கள்: சவூதி அரேபியாவுக்கு மலேசியா துணை நிற்கும்
September 22, 2026, 9:27 am
வாங்சாமாஜூ எல்ஆர்டி ரயில் நிலைய தண்டவாளத்தில் பயணி மயங்கி விழுந்தார்
September 22, 2026, 9:26 am
