செய்திகள் மலேசியா
டியூசன் மையங்களுக்கான பூமிபுத்ரா பங்குரிமை விதி நீக்கம் குறித்து எழுத்துப்பூர்வமான உறுதி கடிதம் வேண்டும்: டத்தோ கமலநாதன்
கோலாலம்பூர்:
டியூசன் மையங்களுக்கான 30% பூமிபுத்ரா பங்குரிமை நிபந்தனை நீக்கப்பட்டுள்ளதாக, கல்வியமைச்சு எழுத்துப்பூர்வமான உறுதி கடிதத்தை வெளியிட வேண்டும்.
முன்னாள் கல்வி துணையமைச்சர் டத்தோ பி. கமலநாதன் இதனை வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிபந்தனையை நீக்கும் அமைச்சின் முடிவை வரவேற்கத்தக்கது.
இந்த மாற்றம் புதிய விண்ணப்பங்களுக்கும், உரிமத்தைப் புதுப்பிக்க முற்படும் ஏற்கனவே உள்ள மையங்களுக்கும் பொருந்துமா என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறினார்.
மேலும், குழப்பத்தைத் தவிர்க்கும் வகையில், இது தொடர்பான அனைத்து வழிகாட்டுதல்களையும் அமைச்சு தனது இணையதளத்தில் புதுப்பிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தனது கட்டுப்பாட்டில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களுக்கான 30 சதவீத பூமிபுத்ரா பங்குரிமை நிபந்தனையை நீக்க அமைச்சு எடுத்துள்ள முடிவு மலேசியக் கல்வித் துறைக்குச் சரியான ஒன்றாகும் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பங்குதாரர்களின் இனப் பின்னணியை அடிப்படையாகக் கொள்ளாமல், ஆசிரியர்களின் தரம், மாணவர் பாதுகாப்பு மற்றும் கற்றல் விளைவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் டியூசன் மையங்கள் மதிப்பிடப்பட வேண்டும்.
கல்வி நிறுவனங்களை நடத்துபவர்கள், பெற்றோர்கள், பிற தொடர்புடைய தரப்பினரின் கருத்துகளுக்குச் செவிசாய்த்ததற்கும், நாட்டின் கல்வி மேம்பாட்டிற்குப் பங்களிக்க விரும்புவோருக்கு இத்துறையில் வாய்ப்பளித்ததற்கும் கல்வி அமைச்சு, முதலீடு, வர்த்தகம், தொழில் அமைச்சகம் ஆகியவற்றுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 22, 2026, 11:18 am
மலாக்கா மாநில சட்டமன்றம் இன்று கலைக்கப்படுகிறதா?
September 22, 2026, 11:04 am
மெகா iLINDUNGu விழாவின் வாயிலாக 523 பேர் நேர்காணல் தேர்வின் தேர்ச்சிக்கு பின் வெற்றிகரமாக வேலையை பெற்றனர்: பெர்கேசோ
September 22, 2026, 11:03 am
குருவிமலை ஸ்ரீ மகா காளியம்மன், ஏழு கன்னிகள் ஆலயத்திற்கு நிரந்த நிலம்; பல ஆண்டுகால கோரிக்கைக்கு தீர்வு: பாக்கியநாதன்
September 22, 2026, 9:28 am
ஹூத்தி தாக்குதல்கள்: சவூதி அரேபியாவுக்கு மலேசியா துணை நிற்கும்
September 22, 2026, 9:27 am
வாங்சாமாஜூ எல்ஆர்டி ரயில் நிலைய தண்டவாளத்தில் பயணி மயங்கி விழுந்தார்
September 22, 2026, 9:26 am
