நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விமான நிலையக் கழிப்பறையில் குழந்தை கண்டெடுக்கப்பட்ட சம்பவம்: மியான்மார் ஆண், உள்ளூர் பெண் கைது

பாயான் லெப்பாஸ்:

கடந்த  ஆகஸ்ட் 31ஆம் தேதி பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறையில் ஆண் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

இது தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக, மியான்மார் நாட்டைச் சேர்ந்த ஒரு ஆணும், உள்ளூர் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

பினாங்கு தென் மேற்கு மாவட்ட போலிஸ் தலைவர்  அனுவால் அப்துல் வஹாப் இதனை கூறினார்.

22, 23 வயதுடைய அவ்விருவரும், இங்குள்ள புக்கிட் ஜம்புல் வளாகத்தில் சிசிடிவி சோதனையின் மூலம் கண்டறியப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.

தொட்டிக்குள் இருந்து அழுகுரல் கேட்டதை அடுத்து, துப்புரவுப் பணியாளர்கள் அந்தக் ஆண் குழந்தையைக் கண்டெடுக்கப்பட்டது.

மேல் சிகிச்சைக்காக அக்குழந்தை பினாங்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset