நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜாலான் பாரு ஶ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் நடந்த கைகலப்பு: ஆலய நிர்வாகம் விளக்கம்

பிறை:

பினாங்கு  ஜாலான் பாரு ஶ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் நடந்த கைகலப்பு தொடர்பில் ஆலய நிர்வாகம் ஓர் அறிக்கையின் வாயிலாக விளக்கமளித்துள்ளது.

நாட்டில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஆலயமாக ஜாலான் பாரு ஶ்ரீ முனீஸ்வரர் ஆலயம் விளங்குகிறது.

இவ்வாலயத்தில் நடந்ததாக நம்பப்படும் கைகலப்பு தொடர்பான வீடியோ பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாக வருகின்றனர்.

இவ்வீடியோ குறித்து பல்வேறான அனுமானங்களும் கருத்துகளும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட வீடியோ பக்தர்கள் மத்தியில் தவறான புரிதல்களை ஏற்படுத்தி வருகிறது.

இந்த சம்பவத்திற்கும் ஆலய நிர்வாகத்திற்கும் குறிப்பாக ஆலயத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

மேலும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே ஏற்பட்ட தவறான புரிதல்களே இச்சம்பவத்திற்கு முக்கிய காரணமாகும்.

ஆகவே பக்தர்களும் பொதுமக்களும் உண்மை நிலை தெரியாமல் தேவையற்ற அனுமானங்களையும் கருத்துகளையும் பகிர வேண்டாம்.

இதுவே எங்களின் அன்பான கோரிக்கை என ஆலய நிர்வாகம் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset