செய்திகள் மலேசியா
DBKL ஏற்பாட்டிலான 2026 தீபாவளி சந்தை கட்டணம் 85 சதவீதம் குறைப்பு: அமைச்சர் ஹன்னா இயோ அறிவிப்பு
கோலாலம்பூர்:
கோலாலம்பூர் மாநகரில் நடைபெறவுள்ள 2026ஆம் ஆண்டுக்கான தீபாவளி சந்தை கட்டணம் அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த புதிய கட்டடக் குறைப்பு நடவடிக்கையானது தலைநகரப் பகுதி வியாபாரிகளுக்கு மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளது.
முன்னதாக இரண்டாயிரத்து அறுநூறு ரிங்கிட்டுக்கும் அதிகமாக இருந்த தற்காலிகக் கடைத் தொகுதிக்கான கட்டணம் இப்போது கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் வைப்புத்தொகை உட்பட ஒட்டுமொத்த கட்டணமும் நானூறு ரிங்கிட்டாக மாற்றியமைக்கப்பட்டு முறைப்படுத்தப்பட்டுள்ளது.
கூட்டரசு பிரதேச பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா இயோ இந்த முக்கிய தகவலை வெளியிட்டார்.
கோலாலம்பூர் பகுதி வியாபாரிகளின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ரமலான் சந்தைகளுக்காக ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்ட அதே கட்டண முறை இப்போது தீபாவளி சந்தைக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் தலைநகர வணிகர்கள் எவ்வித கூடுதல் நிதி நெருக்கடியும் இன்றித் தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள முடியும்.
கட்டணக் குறைப்புடன் சேர்த்து வணிகர்களின் வர்த்தக இயக்கக் காலமும் தற்போது வெற்றிகரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது
முந்தைய ஆண்டுகளைப் போலன்றி இந்த முறை இருபத்தோரு நாட்களுக்குப் பதிலாக முப்பது நாட்களாக இயக்கக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
வியாபாரிகளுக்குக் கூடுதல் அவகாசம் வழங்குவதன் மூலமாக அவர்களின் வர்த்தக வாய்ப்புகள் பலமடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 21, 2026, 5:11 pm
ஜாலான் பாரு ஶ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் நடந்த கைகலப்பு: ஆலய நிர்வாகம் விளக்கம்
September 21, 2026, 4:37 pm
சுல்தான் இஸ்கண்டார் நெடுஞ்சாலையில் பயங்கர சாலை விபத்து: 22 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி
September 21, 2026, 4:23 pm
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட வேண்டும்: அமானா வலியுறுத்தல்
September 21, 2026, 4:23 pm
55,000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மனநலப் பிரச்சினைகளின் அதிக அபாயத்தில் உள்ளனர்
September 21, 2026, 4:22 pm
நஜிப் நிதிக்கு நன்கொடை அளித்தவர்களில் புரூணை, இத்தாலி, கனடாவைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்: ரோஸ்மா
September 21, 2026, 4:21 pm
அந்தோனி லோக் ராஜினாமா; மத்திய செயற்குழுவின் முடிவு இறுதியானது: ஹன்னா இயோ
September 21, 2026, 2:23 pm
