நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரயானி ஏர் 2.0 புதிய நிர்வாகத்தின் தலைமையில் கிளந்தானை தளமாகக் கொண்டு செயல்படும்

கோலாலம்பூர்:

ரயானி ஏர் நிறுவனம் ரயானி ஏர் 2.0 மூலம் புதிய நிர்வாகத்துடன் மீண்டும் விமான சேவைக்கு வந்துள்ளது.

இது கிளந்தான், கோத்தா பாருவில் தலைமையாக கொண்டிருக்கும்.

அதன் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் ஒரு அறிவிப்பில்,
ரயானி ஏர் தனது வணிக அலுவலகம் கோத்தாபாருவில் அமைந்திருக்கும்.

அதன் செயல்பாட்டு மையம் சுல்தான் இஸ்மாயில் பெட்ரா விமான நிலையத்தில் இருக்கும் எனக் கூறியது.

நாங்கள் அறிவிப்பது என்னவென்றால், ரயானி 2.0 புதிய நிர்வாகத்துடன் மீண்டும் விமான சேவைக்கு வந்துள்ளது

மேலும், ரயானி ஏர், டத்தோ முகமது ஜமீல் முகமதுவை தனது புதிய தலைவராக அறிமுகப்படுத்தியது.

முகமது ஜமீல் ஒரு முன்னாள் அரசு ஊழியர் ஆவார். நிர்வாகத்தில் பரந்த அனுபவம் கொண்ட இவர், ஒரு தேசிய சுற்றுலா பிரமுகராக அறியப்படுகிறார்.

ரயானி 2.0-ஐ மேலும் ஒழுங்கமைக்கப்பட்ட, விவேகமான மற்றும் நேர்மை அடிப்படையிலான திசையில் வழிநடத்த அவர் காட்டிய விருப்பத்திற்கு நாங்கள் மிகவும் பெருமையும் நன்றியும் கொள்கிறோம் என ரயானி ஏர் கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset