செய்திகள் மலேசியா
55,000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மனநலப் பிரச்சினைகளின் அதிக அபாயத்தில் உள்ளனர்
புத்ராஜெயா:
அரசு ஊழியர்களின் உளவியல் ஆரோக்கியத்திற்கான டிஜிட்டல் சுயவிவர அமைப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மொத்தம் 55,169 அரசு ஊழியர்கள், தற்கொலை எண்ணங்கள் உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளின் அடிப்படையில் அதிக அபாயத்தில் உள்ள ஊழியர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பொதுச் சேவைத் துறையின் மேம்பாடு பிரிவின் துணை தலைமை இயக்குநர் டாக்டர் முகமது பக்காரி இஸ்மாயில் இதனை கூறினார்.
இந்த எண்ணிக்கை ஒட்டுமொத்த அரசு ஊழியர்களிடையே உளவியல் நலனை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.
2025ஆம் ஆண்டுக்கான மலேசிய உளவியல் நல்வாழ்வு குறியீட்டு ஆய்வின் முடிவுகள், நிறுவனங்களின் நல்வாழ்வைப் பாதிக்கும் முக்கிய காரணிகளில் உளவியல் நல்வாழ்வும் ஒன்றாகும் என்பதையும், அதன் மூலம் மக்களுக்கு வழங்கப்படும் சேவையின் தரத்தையும் இது பாதிக்கிறது என்பதையும் காட்டுகின்றன.
எனவே, உளவியல் நல்வாழ்வை முழுமையாக வலுப்படுத்தும் முயற்சிகள், இந்த நாட்டின் மக்கள், குறிப்பாக நாட்டின் நிர்வாகத்தின் முதுகெலும்பாக விளங்கும் பொதுச் சேவைத் துறையினர், திறமையாகவும், பொறுப்புடனும், மீள்திறனுடனும் இருப்பதை உறுதி செய்வதற்கான ஒரு முக்கிய முதலீடாகக் கருதப்பட வேண்டும்.
கோலாலம்பூர், புக்கிட் கியாராவில் உள்ள பொது நிர்வாக நிறுவனத்தில் நடைபெற்ற, 'மக்களுக்கு வலுவூட்டும் உளவியல், எதிர்காலத்தை வடிவமைத்தல்' என்ற கருப்பொருளைக் கொண்ட 2026 பொதுச் சேவை உளவியல் அதிகாரிகள் மாநாட்டின் தொடக்க விழாவில் அவர் பேசினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 21, 2026, 5:11 pm
ஜாலான் பாரு ஶ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் நடந்த கைகலப்பு: ஆலய நிர்வாகம் விளக்கம்
September 21, 2026, 4:37 pm
சுல்தான் இஸ்கண்டார் நெடுஞ்சாலையில் பயங்கர சாலை விபத்து: 22 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி
September 21, 2026, 4:23 pm
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட வேண்டும்: அமானா வலியுறுத்தல்
September 21, 2026, 4:22 pm
நஜிப் நிதிக்கு நன்கொடை அளித்தவர்களில் புரூணை, இத்தாலி, கனடாவைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்: ரோஸ்மா
September 21, 2026, 4:21 pm
அந்தோனி லோக் ராஜினாமா; மத்திய செயற்குழுவின் முடிவு இறுதியானது: ஹன்னா இயோ
September 21, 2026, 3:33 pm
DBKL ஏற்பாட்டிலான 2026 தீபாவளி சந்தை கட்டணம் 85 சதவீதம் குறைப்பு: அமைச்சர் ஹன்னா இயோ அறிவிப்பு
September 21, 2026, 2:23 pm
