செய்திகள் மலேசியா
சுல்தான் இஸ்கண்டார் நெடுஞ்சாலையில் பயங்கர சாலை விபத்து: 22 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி
கோலாலம்பூர்:
தலைநகர், சுல்தான் இஸ்கண்டார் நெடுஞ்சாலையில் இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில் 22 வயதுடைய மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார்
கோலாலம்பூர் போக்குவரத்து காவல்துறை தலைவர் இந்த சாலை விபத்து சம்பவத்தை உறுதிப்படுத்தினர்
கோலாலம்பூர் இரண்டாவது சுரங்கப்பாதையின் வலது லேனில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றுள்ளார்.
அவர் ஜாலான் டமான்சாரா பகுதியை நோக்கிப் பயணித்ததாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது தன் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அதே வழியில் சென்ற ஹோண்டா சிட்டி காரின் பின்புற வலது பக்கத்தில் மோதியது.
இதனால் நிலைதடுமாறிய அவர் உடனடியாகச் சாலையின் இடது பக்க லேனில் தூக்கி வீசப்பட்டார்.
அதே நேரத்தில் அந்த வழியாக வந்த லாரி மீது மோதியதில் அவர் படுகாயமடைந்தார். அந்த லாரியை 40 வயது மதிக்கத்தக்க டிரைவர் ஒருவர் இயக்கி வந்ததாகப் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு உடனடியாக வரவழைக்கப்பட்ட மருத்துவக் குழுவினர் மோட்டார் சைக்கிள் ஓட்டியைப் பரிசோதித்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகப் பாராமெடிக்ஸ் அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினர்.
இச்சம்பவம் குறித்து சாலைப் போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 41(1)-ன் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 21, 2026, 5:11 pm
ஜாலான் பாரு ஶ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் நடந்த கைகலப்பு: ஆலய நிர்வாகம் விளக்கம்
September 21, 2026, 4:23 pm
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட வேண்டும்: அமானா வலியுறுத்தல்
September 21, 2026, 4:23 pm
55,000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மனநலப் பிரச்சினைகளின் அதிக அபாயத்தில் உள்ளனர்
September 21, 2026, 4:22 pm
நஜிப் நிதிக்கு நன்கொடை அளித்தவர்களில் புரூணை, இத்தாலி, கனடாவைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்: ரோஸ்மா
September 21, 2026, 4:21 pm
அந்தோனி லோக் ராஜினாமா; மத்திய செயற்குழுவின் முடிவு இறுதியானது: ஹன்னா இயோ
September 21, 2026, 3:33 pm
DBKL ஏற்பாட்டிலான 2026 தீபாவளி சந்தை கட்டணம் 85 சதவீதம் குறைப்பு: அமைச்சர் ஹன்னா இயோ அறிவிப்பு
September 21, 2026, 2:23 pm
