நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துவாங்கு முஹ்ரிஸ் உடனான சந்திப்புக்குப் பிறகு பிரதமர் இஸ்தானா நெகிரி செம்பிலானிலிருந்து வெளியேறினார்

சிரம்பான்:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பயணித்த வாகனம் இன்று மாலை 6.58 மணியளவில் இஸ்தானா நெகிரி செம்பிலானில் இருந்து புறப்பட்டது.

நெகிரி செம்பிலானின் யாங் டி-பெர்டுவான் பெசார், துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரைச் சந்திப்பதற்காக அவர் முன்பு மாலை 6 மணியளவில் அரண்மனைக்குள் நுழைவதைக் காண முடிந்தது.

நெகிரி செம்பிலானைத் தாக்கிய  அரசியலமைப்பு நெருக்கடி தொடர்பாக அதிகரித்து வரும் பதட்டத்தைத் தொடர்ந்து, யாங் டி-பெர்துவான் பெசார், துவாங்கு முஹ்ரிஸ் துவான்கு முனாவிரை பிரதமர் சந்தித்தார் என நம்பப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset