செய்திகள் மலேசியா
தஞ்சோங் செடிலியில் ஆற்றில் வீசப்பட்டதால் 5 வயது சிறுமி உயிரிழந்தார்
கோத்தா திங்கி:
தஞ்சோங் செடிலி, கம்போங் பாடாங் பகுதியில் ஐந்து வயது சிறுமியை ஆற்றில் வீசி கொன்றதாக சந்தேகிக்கப்படும் 37 வயது உள்ளூர்வாசி ஒருவரை இன்று போலிசார் கைது செய்துள்ளனர்.
கோத்தா திங்கி மாவட்ட போலிஸ் தலைவர் யூசோஃப் ஓத்மான் இதனை கூறினார்.
காலை சுமார் 9.30 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்து தனது துறைக்கு தகவல் கிடைத்ததை அடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர், பாதிக்கப்பட்ட சிறுமியை ஆற்றில் வீசியெறிந்த பிறகு, அரிவாளுடன் வெறித்தனமாகச் செயல்பட்டு 40 வயதுடைய ஒருவரைத் துரத்தியதாக நம்பப்படுகிறது என்று அவர் கூறினார்.
தகவலின் பேரில், கோலா செடிலி போலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஒரு போலிஸ் குழு சம்பவ இடத்திற்குச் சென்று சந்தேக நபரைக் கைது செய்தது.
கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது, அங்கு ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஒரு போலிஸ் அதிகாரி காயமடைந்தார்.
ஆனால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 22, 2026, 11:07 pm
நெகிரி செம்பிலான் விவகாரங்களில் தலையிட வேண்டாம்: பிரதமருக்கும், சட்டத்துறைத் தலைவருக்கும் எச்சரிக்கை
September 22, 2026, 11:04 pm
நெகிரி செம்பிலான் மந்திரி புசார், ஆட்சிக் குழு உறுப்பினர்கள் நாளை துங்கு நட்சாருடினை சந்திக்கிறார்கள்
September 22, 2026, 11:02 pm
ஸ்கூடாய், தம்போய் வட்டாரத்தில் காணாமல் போன 4 பதின்ம வயதினரை போலிஸ் தேடி வருகிறது
September 22, 2026, 5:27 pm
ஒற்றுமையும் கல்விச் சாதனையும் ஒருங்கிணைந்த மீலாதுன் நபி விழா; ஷேக் அகார் முஹம்மதின் எழுச்சி உரை
September 22, 2026, 5:20 pm
தவறு செய்த முதலாளிகளுக்கு 15 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 25,011 அபராத சம்மன்களை பெர்கேசோ வழங்கியுள்ளது
September 22, 2026, 5:19 pm
ஆசியப் போட்டியில் மலேசியாவின் முதல் தங்கப்பதக்கத்தை அடெயோலா வென்றார்
September 22, 2026, 5:17 pm
அம்னோ அரண்மனையுடன் மோதிக்கொண்டிருந்தபோது உங்கள் குரல் எங்கே போயிருந்தது?: அக்மாலுக்கு வழக்கறிஞர் சிவமலர் கேள்வி
September 22, 2026, 5:17 pm
சம்பள உயர்வு வேண்டுமா?: 2027 பட்ஜெட்டில் நல்ல செய்தி வரவிருப்பதாக டத்தோஶ்ரீ ரமணன் சூசகமாகத் தெரிவித்தார்
September 22, 2026, 3:08 pm
மலாக்கா மாநில சட்டமன்றம் நாளை கலைக்கப்படவுள்ளது: முதலமைச்சர் அறிவிப்பு
September 22, 2026, 3:08 pm
