செய்திகள் கலைகள்
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் ONDRA RENDA இசை நிகழ்ச்சி: பின்னணி பாடகர் கார்த்திக் இணைகிறார்
கோலாலம்பூர்:
தமிழ்ச்சினிமாவின் பிரபல பின்னணி பாடகரான கார்த்திக், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் ONDRA RENDA 25 YEARS OF GVM இசை நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.
ONDRA RENDA - 25 YEARS OF GVM இசை நிகழ்ச்சி எதிர்வரும் அக்டோபர் 10ஆம் தேதி தலைநகரில் உள்ள THE ARCH GALERIESஇல் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
இந்த இசை நிகழ்ச்சியில் பாடகர் கார்த்திக் தனது இசை படைப்பினை வழங்குவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் பாடகர் கார்த்திக் தனது பாடல்களைப் பாடி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றார்.
கரு கரு விழிகளால், அஞ்சல, ஒரு ஓரில் அழகே அழகே, போன்ற பாடல்கள் இன்று ரசிகர்களின் முதல் தேர்வாக உள்ளன.
இம்மாபெரும் விழா My Events International, Radaan Mediaworks ஆகியவை இணைந்து படைக்கவுள்ளன.
மேலும் இவ்விரு நிறுவனங்களின் ஒத்துழைப்பு மலேசியாவில் உயர்தர இந்திய சினிமா, பொழுதுபோக்கு முயற்சிகளை உருவாக்கி மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 12:07 pm
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் - இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்: எப்போதும் ஸ்பெஷலான கோம்போ
September 5, 2026, 11:57 am
ONDRA RENDA 25 YEARS OF GVM இசை நிகழ்ச்சி: இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய திரைப்படங்கள் குறித்த பார்வை
September 3, 2026, 1:55 pm
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம் அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகிறது
September 2, 2026, 4:29 pm
ஆர்யாவின் அனந்தன் காடு திரைப்படம் ஓடிடியில் வெளியானது
September 2, 2026, 2:38 pm
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் ONDRA RENDA இசை நிகழ்ச்சி: நடிகை ஸ்ருதிஹாசன் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்
August 30, 2026, 7:20 pm
ரூ.150 கோடி வசூலை கடந்தது ரவிதேஜாவின் ‘இருமுடி கட்டு’ திரைப்படம்
August 24, 2026, 11:52 am
