செய்திகள் கலைகள்
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் ONDRA RENDA இசை நிகழ்ச்சி: நடிகை ஸ்ருதிஹாசன் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்
கோலாலம்பூர்:
தமிழ்ச்சினிமாவின் பிரபல நடிகையும் பின்னணி பாடகியுமான நடிகை ஸ்ருதிஹாசன் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் ONDRA RENDA 25 YEARS OF GVM இசை நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.
ONDRA RENDA - 25 YEARS OF GVM இசை நிகழ்ச்சி எதிர்வரும் அக்டோபர் 10ஆம் தேதி தலைநகரில் உள்ள THE ARCH GALERIESஇல் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
இந்த இசை நிகழ்ச்சியில் நடிகை ஸ்ருதிஹாசன் தனது இசை படைப்பினை வழங்குவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. கௌதம் மேனன் இயக்கத்தில் வாரணம் ஆயிரம் படத்தில் அடியே கொல்லுதே பாடலை நடிகை ஸ்ருதிஹாசன் தான் பாடினார்.
நடிகை ஸ்ருதிஹாசனின் நேரலை இசை படைப்பை காண மலேசிய இரசிகர்கள் பெரும் ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இம்மாபெரும் விழா My Events International, Radaan Mediaworks ஆகியவை இணைந்து படைக்கவுள்ளன.
மேலும் இவ்விரு நிறுவனங்களின் ஒத்துழைப்பு மலேசியாவில் உயர்தர இந்திய சினிமா, பொழுதுபோக்கு முயற்சிகளை உருவாக்கி மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ONDRA RENDA 25 YEARS OF GVM இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை வாங்க ரசிகர்கள் TICKET2U.COM.MY எனும் அகப்பக்கத்தை வலம் வரலாம்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 12:07 pm
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் - இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்: எப்போதும் ஸ்பெஷலான கோம்போ
September 5, 2026, 11:57 am
ONDRA RENDA 25 YEARS OF GVM இசை நிகழ்ச்சி: இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய திரைப்படங்கள் குறித்த பார்வை
September 3, 2026, 1:55 pm
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம் அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகிறது
September 2, 2026, 4:29 pm
ஆர்யாவின் அனந்தன் காடு திரைப்படம் ஓடிடியில் வெளியானது
September 2, 2026, 2:46 pm
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் ONDRA RENDA இசை நிகழ்ச்சி: பின்னணி பாடகர் கார்த்திக் இணைகிறார்
August 30, 2026, 7:20 pm
ரூ.150 கோடி வசூலை கடந்தது ரவிதேஜாவின் ‘இருமுடி கட்டு’ திரைப்படம்
August 24, 2026, 11:52 am
