நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திருநங்கைகள் அழகுப் போட்டியில் பங்கேற்ற மலேசியரை சமய விவகாரத் துறை அமைச்சர் கண்டித்தார்

புத்ராஜெயா:

சமீபத்தில் தாய்லாந்தின் பேங்காக்கில் நடைபெற்ற திருநங்கைகள் அழகுப் போட்டியில் பங்கேற்ற ஒரு தனிநபரின் செயல்களை, பிரதமர் துறையின் சமய விவகாரங்கள் துறை அமைச்சர் சூல்கிஃப்லி ஹசான் வன்மையாகக் கண்டித்தார்.

சம்பந்தப்பட்ட தனிநபரின் செயல்கள் நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்தது.

மேலும் இஸ்லாமிய போதனைகள், உள்ளூர் கலாச்சார நெறிமுறைகள், மலேசியர்கள் கொண்டிருக்கும் கண்ணிய விழுமியங்களுக்கு முற்றிலும் முரணானவை என்று அவர் வலியுறுத்தினார்.

இத்தகைய நிகழ்வை ஏற்பாடு செய்வதற்கோ அல்லது அதில் பங்கேற்பதற்கோ மத அதிகாரிகளிடமிருந்தோ அல்லது மலேசிய அரசாங்கத்திடமிருந்தோ எந்த ஆதரவோ, அனுமதியோ அல்லது அங்கீகாரமோ ஒருபோதும் கிடைத்ததில்லை.

எதிர்ப் பாலினத்தவர் போல் நடிப்பதும், திருநங்கை வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதும் இஸ்லாமிய சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டது ஆகும்.

மேலும், மாநிலங்களில் ஷரியா சட்டத்தின் கீழ் இது தடைசெய்யப்பட்டுள்ளது என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம் என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

முன்னதாக, போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய, ஒரு திருநங்கை என்று நம்பப்படும் பங்கேற்பாளரின் காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது. 

இது, அந்த நிகழ்வு பினாங்கில் நடைபெறுவதாகக் குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுத்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset