செய்திகள் கலைகள்
ரூ.150 கோடி வசூலை கடந்தது ரவிதேஜாவின் ‘இருமுடி கட்டு’ திரைப்படம்
சென்னை:
ரவிதேஜா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘இருமுடி’ திரைப்படம் ரூ.150 கோடி வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது.
சிவ நிர்வாணா இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ‘இருமுடி’. ரவிதேஜா, ப்ரியா பவானி சங்கர், சாய் குமார், சுவாசிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இப்படம் ஆகஸ்ட் 21-ம் தேதி தெலுங்கிலும், ‘இருமுடி கட்டு’ என்ற பெயரில் தமிழிலும் வெளியானது.
படம் வெளியாகி அதன் இரண்டாவது வாரத்தினை எட்டி இருக்கும் நிலையில் உலகம் முழுவதிலும் படம் ரூ.150 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ரவிதேஜாவின் சமீபத்திய படங்கள் யாவுமே பெரும் தோல்வியை தழுவி வந்த நிலையில், ‘இருமுடி’ மாபெரும் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இப் படத்துக்கு ரவிதேஜா சம்பளம் பெறாமல் பட விநியோகத்தில் நிசாம் உரிமையினை பெற்றிருந்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 12:07 pm
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் - இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்: எப்போதும் ஸ்பெஷலான கோம்போ
September 5, 2026, 11:57 am
ONDRA RENDA 25 YEARS OF GVM இசை நிகழ்ச்சி: இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய திரைப்படங்கள் குறித்த பார்வை
September 3, 2026, 1:55 pm
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம் அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகிறது
September 2, 2026, 4:29 pm
ஆர்யாவின் அனந்தன் காடு திரைப்படம் ஓடிடியில் வெளியானது
September 2, 2026, 2:46 pm
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் ONDRA RENDA இசை நிகழ்ச்சி: பின்னணி பாடகர் கார்த்திக் இணைகிறார்
September 2, 2026, 2:38 pm
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் ONDRA RENDA இசை நிகழ்ச்சி: நடிகை ஸ்ருதிஹாசன் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்
August 24, 2026, 11:52 am
