செய்திகள் மலேசியா
சுதந்திர உணர்வு தொடர்ந்து ஊட்டப்பட வேண்டும்; தேசத்தைக் கட்டியெழுப்ப அனைத்து இனங்களும் ஒன்றிணைய வேண்டும்: பிரதமர்
புத்ராஜெயா:
ஒவ்வொரு மலேசியரின் ஆன்மாவிலும் மனத்திலும் சுதந்திர உணர்வு தொடர்ந்து ஊட்டப்பட வேண்டும்.
தேசத்தைக் கட்டியெழுப்பவும், உரிமைகளைப் பாதுகாக்கவும், நீதியை நிலைநாட்டவும் அனைத்து இனங்களும் ஒன்றிணைய வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
சுதந்திரம் என்பது அமைப்பையும் நாட்டையும் மட்டும் உள்ளடக்கியது அல்ல.
மாறாக ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்மையான சுதந்திரமான ஆன்மா இருப்பதை உறுதி செய்வதே மிக முக்கியமானது என்று பிரதமர் கூறினார்.
இதுவே மிகப்பெரிய தடையும் சவாலும் ஆகும்.
எனவே, இடிபாடுகளிலிருந்து மீண்டும் கட்டியெழுப்ப, நமது ஆன்மாக்களிலும் மனங்களிலும் சுதந்திர உணர்வை ஊட்ட வேண்டும்.
ஆகையால், நாம் ஒன்றுபட வேண்டும்.
யார் ஒன்றுபட வேண்டும்? நமது முன்னோர்கள், இனம், பிராந்தியம் அல்லது மாகாணத்தை ஒன்றுபடுத்துங்கள் என்று கூறவில்லை.
மாறாக, ஒவ்வொரு இனத்தையும் ஒன்றுபடுத்துங்கள் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 30, 2026, 6:25 pm
பொது சுகாதாரத் துறையை இலக்கவியமயமாக்கலுக்கு 1 பில்லியன் ரிங்கிட் நிதி உதவி: ஃபஹ்மி
August 30, 2026, 6:10 pm
அடுத்த ஆண்டு பள்ளிகளுக்கான பராமரிப்பு ஒதுக்கீடு 50 சதவீதம் அதிகரிக்கப்படும்: பிரதமர்
August 30, 2026, 6:09 pm
பூடி ரோன் 95 பெட்ரோல் மாதத்திற்கு மீண்டும் 300 லிட்டராக உயர்த்தப்படும்: பிரதமர்
August 30, 2026, 3:05 pm
நேப்பாளத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்; மலேசியாவின் மனிதாபிமான உணர்வை பிரதிபலிக்கின்றன: குணராஜ்
August 30, 2026, 10:27 am
8 ஆண்டுகளாக தேசியக் கொடியை விநியோகித்து தேசப்பற்றை பரப்பும் 64 வயது ஆர். ராதா
August 30, 2026, 10:27 am
