நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

8 ஆண்டுகளாக தேசியக் கொடியை விநியோகித்து தேசப்பற்றை பரப்பும் 64 வயது ஆர். ராதா

ஈப்போ:

ஹார்ன் சத்தம் கேட்கும், கைகள் அசையும், தூரத்தில் இருந்து தேசியக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட பெரோடுவா கெம்பாரா கார் வருவதை பார்தலே போதும்.

உடனே குழந்தைகள் அம்மா மெர்டேகா வந்துட்டாங்க என கத்திக்கொண்டு வீட்டில் இருந்து ஓடி வருவார்கள்.

இப்படி ஈப்போ நகரம், குறிப்பாக புந்தோங் பகுதி மக்களின் மனதை கவர்ந்தவர் 64 வயது ஜி. ராஜேஸ்வரி அல்லது அன்புடன் அழைக்கப்படும் "ராதா அம்மா".

2017-ல் தொடங்கிய பயணம்
8,000 ரிங்கிட்டுக்கு வாங்கிய பழைய பெரோடுவா கெம்பாரா காரை 2017ஆம் ஆண்டு முதல் பல்வேறு அளவிலான பல டஜன் தேசியக் கொடிகளால் அலங்கரித்து வருகிறார்.

கூரையில் இருந்து கதவு வரை முழுவதும் கொடிகள்.

லாஸ்ட் வேர்ல்ட் ஆஃப் தம்புனில் முன்னாள் சமையல்காரரான இவர், சிறுவயதில் தந்தையுடன் டத்தாரான் ஈப்போவில் நடக்கும் மெர்டேகா நிகழ்வுகளுக்கு சென்றதில் இருந்தே நாட்டுப்பற்று வந்ததாக கூறுகிறார்.

அங்க இருந்து தான் கொடிய பார்க பிடிக்கும், மெர்டேகா சூழ்நிலை பிடிக்கும். அந்த உணர்வு இன்னும் போகல என்கிறார்.

வருடத்திற்கு 2,000 ரிங்கிட் வரை செலவு
தனது எளிய வாழ்கையிலும் தேசியக் கொடியை இலவசமாக விநியோகிக்கும் பாரம்பரியத்தை விடவில்லை. ஒரு வருடத்திற்கு 2,000 ரிங்கிட் வரை சொந்த பணத்தில் செலவு செய்து கொடி வாங்கி மக்களுக்கு தருகிறார்.

சில நேரம் ஒரே இரவுல 1,000 ரிங்கிட் கூட தீர்ந்துடும். ஆனா மக்கள் சந்தோஷமா இருக்குறத பார்கும்போது எனக்கு அதுவே போதும் என புன்னகையுடன் கூறினார்.

குழந்தைகள் மட்டுமல்ல, துண்டுடன் குளிக்காமல் கூட ஓடி வரும் குழந்தைகள், சீன, இந்திய பாட்டிகள் என பல இனத்தவரும் இவரிடம் கொடி வாங்க செல்கின்றனர்.

ஆண்டு முழுவதும் தேசபக்தி
இவரது காரில் ஆண்டு முழுவதும் தேசிய பாடல்கள் மற்றும் பண்டிகை பாடல்கள் ஒலிக்கும்.

பண்டிகைக்கு ஏற்ற பாடல்களை மாற்றி, ஜூலை முதல் செப்டம்பர் நடுப்பகுதி வரை மெர்டேகா பாடல்களை ஒலிக்க விடுவார்.

எனக்கு மெர்டேகா என்றால் அமைதி, பாதுகாப்பு. எல்லா இனமும் சேர்ந்து வாழலாம், எங்க போனாலும் சுதந்திரமா பாதுகாப்பா இருக்கலாம் என்கிறார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset