நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பூடி ரோன் 95 பெட்ரோல் மாதத்திற்கு மீண்டும் 300 லிட்டராக உயர்த்தப்படும்: பிரதமர்

புத்ராஜெயா:

பூடி ரோன் 95 பெட்ரோலுக்கான அடிப்படைத் தகுதியை மாதத்திற்கு 200 லிட்டரிலிருந்து 300 லிட்டராக மீண்டும் உயர்த்த அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளத.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று இதனை அறிவித்தார்.

இதன் மூலம் 16 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மாதத்திற்கு 300 லிட்டர் வரை மானிய விலையில் ரோன் 95 பெட்ரோலைப் பெறுவார்கள்.

அதே நேரத்தில் 50 லட்சத்திற்கும் அதிகமான டீசல் வாகன உரிமையாளர்கள் மாதத்திற்கு 400 லிட்டர் வரை பூடி டீசலைப் பெறத் தகுதி பெறுவார்கள்.

இன்று புத்ராஜயா சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 2026 தேசிய தின பிரதமர் உரையின்போது அவர் இவ்வாறு கூறினார்.

மேலும், துணைப் பிரதமர் டத்தோ செரி டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி, அமைச்சரவை அமைச்சர்கள், அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ டாக்டர் ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர், மக்களவௌ சபாநாயகர் டான்ஸ்ரீ ஜொஹாரி அப்துல் உட்பட 3,000-க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்



தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset