செய்திகள் மலேசியா
புகைமூட்டம்: 150க்கு மேல் ஏபிஐ குறியீடு உள்ள பகுதிகளிலும், நீர்மட்டம் குறைந்த அணைகளிலும் மேக விதைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன: அஹ்மத் ஜாஹித்
செர்டாங்:
புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், குறிப்பாக 150க்கு மேல் காற்று மாசுபடுத்தும் குறியீடு (ஏபிஐ) பதிவாகும் இடங்களிலும், நீர்மட்டம் குறைந்த அணைப் பகுதிகளிலும் மேக விதைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மலேசிய வானிலை ஆய்வுத் துறை, மலேசிய அரச விமானப்படை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி தெரிவித்தார்.
தற்போதைய வெப்பமான வானிலையைத் தொடர்ந்து நீர் விநியோகத்தில் ஏற்படும் தடைகளைத் தவிர்ப்பதற்காக, நீர்மட்டம் குறைந்த அணைகள் இருப்பதால் இந்த நடவடிக்கை முக்கியமானது.
பல அணைகளில் நீர்மட்டம் குறைந்துள்ளது என்பதை நாம் அறிந்திருப்பதால், இது கட்டாயம் செய்யப்பட வேண்டும்.
இன்று புத்ராஜயாவிலும், செப்டம்பர் 3 முதல் 5 வரை சரவாக், கெடா மற்றும் பெர்லிஸ் ஆகிய இடங்களிலும் மேக விதைப்புப் பணிகள் நடைபெறும்.
இந்த மேக விதைப்பு, தேவைகளுக்கு ஏற்ப மட்டுமல்லாமல், பொருத்தத்திற்கும் ஏற்ப செய்யப்படுகிறது.
ஏனெனில், மேகங்கள் இருந்தாலும், அவற்றின் இயக்கத்தின் திசையானது ஒரு குறிப்பிட்ட பகுதியை நோக்கிச் செல்வதைக் காண வேண்டியுள்ளது.
செர்டாங்கில் நடைபெற்ற மஹா கண்காட்சியை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 30, 2026, 6:25 pm
பொது சுகாதாரத் துறையை இலக்கவியமயமாக்கலுக்கு 1 பில்லியன் ரிங்கிட் நிதி உதவி: ஃபஹ்மி
August 30, 2026, 6:10 pm
அடுத்த ஆண்டு பள்ளிகளுக்கான பராமரிப்பு ஒதுக்கீடு 50 சதவீதம் அதிகரிக்கப்படும்: பிரதமர்
August 30, 2026, 6:09 pm
பூடி ரோன் 95 பெட்ரோல் மாதத்திற்கு மீண்டும் 300 லிட்டராக உயர்த்தப்படும்: பிரதமர்
August 30, 2026, 3:05 pm
நேப்பாளத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்; மலேசியாவின் மனிதாபிமான உணர்வை பிரதிபலிக்கின்றன: குணராஜ்
August 30, 2026, 10:27 am
8 ஆண்டுகளாக தேசியக் கொடியை விநியோகித்து தேசப்பற்றை பரப்பும் 64 வயது ஆர். ராதா
August 30, 2026, 10:27 am
