நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நேப்பாளத்தில் காணாமல் போன இரண்டு தீயணைப்பு படை அதிகாரிகள் விரைவில் பத்திரமாகக் கண்டுபிடிக்கப்படுவார்கள்: ங்கா

புத்ராஜெயா:

நேப்பாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து, இன்னும் தொடர்புகொள்ள முடியாத நிலையில் உள்ள இரண்டு மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறை அதிகாரிகளைக் கண்டுபிடிப்பதற்காக, வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சு விஸ்மா புத்ராவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இன்னும் காணாமல் போன 50க்கும் மேற்பட்ட மலேசியர்களில் அடங்கியுள்ள அந்த இருவரையும் கண்டறிய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக அதன் அமைச்சர் ங்கா கோர் மிங் கூறினார்.

இன்னும் கண்டுபிடிக்கப்படாத நமது இரண்டு ‘சிவப்பு நாயகர்களின்’ பாதுகாப்பிற்காக அனைத்து மலேசியர்களும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அவர்கள் பத்திரமாக இருப்பார்கள் என்றும் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்றும் நம்புகிறோம்.

நேற்று இரவு நடைபெற்ற ‘ஜோம் மாக்கான் ஈப்போ எக்ஸ்போ’வைத் தொடங்கி வைத்த பிறகு அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset