நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொது சுகாதாரத் துறையை இலக்கவியமயமாக்கலுக்கு 1 பில்லியன் ரிங்கிட் நிதி உதவி: ஃபஹ்மி

புத்ராஜெயா:

பொது சுகாதாரத் துறையின் இலக்கவியல் செயல்திறனை வலுப்படுத்தும் நோக்கத்திற்காக 1 பில்லியன் ரிங்கிட் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது, நாட்டில் உள்ள அனைத்து மருத்துவர்கள், நுகர்வோரிடம் அதன் அணுகலை விரிவுபடுத்துவதற்கான தகவல் தொடர்பு அமைச்சகத்தின் முயற்சிகளை விரைவுபடுத்தும்.

முன்னர் ஒதுக்கப்பட்ட 650 மில்லியன் ரிங்கிட்டில் இருந்து இந்த நிதி அதிகரிப்பு, தற்போதுள்ள பொது சுகாதார மையங்கள் உட்பட பயனாளிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோஸ்ரீ  ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.

முன்னதாக, 650 மில்லியன் ரிங்கிட் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை 1 பில்லியன் ரிங்கிட்டாக உயர்த்துமாறு பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகளில் பொது வைஃபை வசதி உள்ளிட்ட இலக்கவியல் அணுகல் முயற்சிகளையும், முன்னதாக பதாங் பெசார் சுகாதார மையத்தில் நாங்கள் செயல்படுத்திய மின்-மருத்துவப் பதிவுத் திட்டத்தையும் விரைவுபடுத்துவதற்காக இது செய்யப்படுகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset