நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நேப்பாளத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்; மலேசியாவின் மனிதாபிமான உணர்வை பிரதிபலிக்கின்றன: குணராஜ்

செந்தோசா:

நேப்பாளத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி வழங்கப்பட்டது மலேசியாவின் மனிதாபிமான உணர்வை பிரதிபலிக்கின்றன.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் இதனை கூறினார்.

நேப்பாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மிகப் பெரிய பேரிழிவை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வெள்ளத்தில் 700க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்ததுள்ளனர்.

அதே வேளையில் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணிகள் தொடர்கிறது.

இந்நிலையில் நேப்பாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, பிரதமர்  டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம்  காட்டிய அக்கறைக்கும் விரைவான நடவடிக்கைக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும்  நேப்பாளத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடையும், ஸ்மார்ட் டீம் மலேசியாவின் அணிதிரட்டலும், பேரழிவில் பாதிக்கப்பட்டவர்கள் மீதான மலேசியாவின் மனிதாபிமான உணர்வையும் ஒற்றுமையையும் பிரதிபலிக்கின்றன.

பிரதமரின் தலைமைக்கும் அக்கறைக்கும் எனது நன்றி.

மேலும் மலேசியாவைச் சேர்ந்தவர்கள் இந்த வெள்ளத்தில் சிக்கியிருப்பதாக நம்பப்படுகிறது.

அவர்களை கண்டுப்பிடிக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று குணராஜ் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset