செய்திகள் மலேசியா
நீரின் மேலிருந்த 200 வீடுகள் எரிந்து சாம்பலாகின: மூவர் மரணம்
கோத்தா கினபாலு:
கோத்தா கினபாலுவின் நும்பாக் பகுதியில் இன்று அதிகாலை நீரின் மேலிருந்த சுமார் 200 வீடுகள் தீயில் எரிந்து நாசமாயின.
இதில் இரண்டு பேர் கருகி மாண்டனர். மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
உயிரிழந்தவர்கள் இரண்டு உடன்பிறப்புகளும் அவர்களது உறவினரும் ஆவர்.
கோத்தா கினபாலு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தற்காலிகத் தலைவர் ஹன்னிஸ் மொக்தார்,
தீயை அணைக்கும் பணியின்போது தீயணைப்பு வீரர்கள் இரண்டு பேரைக் கண்டதாகவும், மற்றொருவரைத் தேடும் பணி இன்னும் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
கம்போங் லோக் பூட்டா, கம்போங் லோக் போரிங், கம்போங் சபாங் லாமா ஆகிய மூன்று கிராமங்களில், நீர்நிலைகளை ஒட்டிய வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது.
சுமார் 79 மீ x 116 மீட்டர் பரப்பளவில் ஏறத்தாழ 200 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
தீயணைப்புப் பணிகள், பாதிக்கப்பட்டவர்களைத் தேடுதல், பிற பணிகள் இன்னும் தொடர்கின்றன.
உயிரிழந்த மூவரின் அடையாளங்கள் மற்றும் தற்போதைய நிலை உறுதிசெய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 30, 2026, 10:27 am
8 ஆண்டுகளாக தேசியக் கொடியை விநியோகித்து தேசப்பற்றை பரப்பும் 64 வயது ஆர். ராதா
August 30, 2026, 10:27 am
நேப்பாளம் வெள்ளம்: மலேசியா காத்மாண்டுவின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது
August 30, 2026, 9:29 am
சரவாக் மாநிலத்தின் பல மாவட்டங்களில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது
August 29, 2026, 11:03 pm
நீண்ட விடுமுறையால் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது
August 29, 2026, 11:01 pm
மடானி அரசு சூதாட்ட நடவடிக்கைகளை ஒருபோதும் ஆதரித்ததில்லை: பிரதமர்
August 29, 2026, 11:00 pm
