செய்திகள் மலேசியா
நேப்பாளம் வெள்ளம்; பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் நாளை விளக்கக் கூட்டம்: முஹம்மது ஹசான்
சிரம்பான்:
நேப்பாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளைத் தொடர்ந்து, இன்னும் கண்டுபிடிக்கப்படாத மலேசியர்களின் குடும்பத்தினருடன் நாளை ஒரு சந்திப்பும் விளக்கக் கூட்டமும் நடைபெறும்.
வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மது ஹசான் இதனை தெரிவித்தார்.
காணாமல் போனவர்கள் என வகைப்படுத்தப்பட்ட பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் குறித்த மேலதிக தகவல்களை வழங்குவதற்காக, இந்த விளக்கக் கூட்டத்தில் விஸ்மா புத்ரா, தேசிய பாதுகாப்பு மன்றம், தொடர்புடைய முகமைகள் பங்கேற்கும் என்று அவர் கூறினார்.
பலர் காணாமல் போனவர்கள் என வகைப்படுத்தப்பட்டிருந்தாலும், அவர்கள் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளனர்
அங்குள்ள பலரைத் தொடர்பு கொள்ள முடிந்ததாகவும், ஆனால் அவர்களின் தேசியம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் சீனத் தரப்பு தெரிவித்துள்ளது.
சிரம்பானில் நடைபெற்ற ஜியாரா காசி நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 30, 2026, 10:27 am
8 ஆண்டுகளாக தேசியக் கொடியை விநியோகித்து தேசப்பற்றை பரப்பும் 64 வயது ஆர். ராதா
August 30, 2026, 10:27 am
நேப்பாளம் வெள்ளம்: மலேசியா காத்மாண்டுவின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது
August 30, 2026, 10:26 am
நீரின் மேலிருந்த 200 வீடுகள் எரிந்து சாம்பலாகின: மூவர் மரணம்
August 30, 2026, 9:29 am
சரவாக் மாநிலத்தின் பல மாவட்டங்களில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது
August 29, 2026, 11:03 pm
நீண்ட விடுமுறையால் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது
August 29, 2026, 11:01 pm
