செய்திகள் மலேசியா
சரவாக் மாநிலத்தின் பல மாவட்டங்களில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது
கூச்சிங்:
சுற்றுச்சூழல் துறையின் APIMS இணையதளத் தகவலின்படி, இன்று காலை 9 மணி நிலவரப்படி, செரியான் பகுதியில் காற்றின் மாசு குறியீடு (API) 364 ஆகப் பதிவாகியுள்ளது;
இது 'ஆபத்தான' (hazardous) நிலையாகும்.
சரவாக் மாநிலத்தில் 'மிகவும் ஆரோக்கியமற்ற' (very unhealthy) API அளவுகளைக் கொண்ட பிற பகுதிகளில் சமரஹான் (300), கூச்சிங் (291), ஸ்ரீ அமான் (214) ஆகியவை அடங்கும்.
மேலும் பல இடங்களிலும் 'ஆரோக்கியமற்ற' (unhealthy) API அளவுகள் பதிவாகியுள்ளன;
இதில் சாரிக்கெய் (195), சிபு (187) ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
காற்றின் API குறியீடானது காற்றின் தரத்தை 'நல்லது' (0-50) முதல் 'ஆபத்தானது' (300-க்கு மேல்) வரையிலான நிலைகளாக வகைப்படுத்துகிறது.
நாடு முழுவதும் உள்ள 68 கண்காணிப்பு நிலையங்களிலிருந்து இதற்கான தரவுகள் ஒவ்வொரு மணி நேரமும் புதுப்பிக்கப்படுகின்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 30, 2026, 10:27 am
8 ஆண்டுகளாக தேசியக் கொடியை விநியோகித்து தேசப்பற்றை பரப்பும் 64 வயது ஆர். ராதா
August 30, 2026, 10:27 am
நேப்பாளம் வெள்ளம்: மலேசியா காத்மாண்டுவின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது
August 30, 2026, 10:26 am
நீரின் மேலிருந்த 200 வீடுகள் எரிந்து சாம்பலாகின: மூவர் மரணம்
August 29, 2026, 11:03 pm
நீண்ட விடுமுறையால் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது
August 29, 2026, 11:01 pm
மடானி அரசு சூதாட்ட நடவடிக்கைகளை ஒருபோதும் ஆதரித்ததில்லை: பிரதமர்
August 29, 2026, 11:00 pm
