செய்திகள் மலேசியா
நீண்ட விடுமுறையால் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது
கோலாலம்பூர்:
வார இறுதி, நீண்ட விடுமுறையால் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பள்ளி விடுமுறைகள், தேசிய தின நீண்ட வார இறுதியை முன்னிட்டு இன்று மாலை வாகனங்கள் அதிகரித்ததால் முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து மெதுவாகவும் நெரிசலாகவும் இருந்தது.
வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் வடக்கு நோக்கிய போக்குவரத்து சுங்கை பூலோவிலிருந்து புக்கிட் பெருந்துங் நோக்கி மெதுவாக நகர்கிறது என்று பிளஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
புக்கிட் தாகர் முதல் லெம்பா பெரிங்கின் வரை; சுங்காய் முதல் சிம்பாங் பூலாய் வரை; சங்கட் ஜெரிங் முதல் தைப்பிங் உத்தாரா; புக்கிட் மேரா முதல் பண்டார் பாரு வரை, பெர்டாம் நோக்கி பெர்மாடாங் பாவ் நெரிசல் நீடிக்கிறது.
தெற்கு நோக்கிய போக்குவரத்து பாங்கியில் இருந்து சவுத்வேலி நோக்கியும், நீலாய் உத்தாராவில் இருந்து பெடாஸ் லிங்கி வரையிலும் நெரிசல் ஏற்பட்டது.
கோலாலம்பூர் - காராக் நெடுஞ்சாலையில், கோம்பாக் டோல் சாவடியிலிருந்து கெண்டிங் செம்பா நோக்கியும், லெண்டாங்கிலிருந்து பெந்தோங் நோக்கியும் கிழக்குக் கடற்கரை செல்லும் போக்குவரத்து மெதுவாக இருந்தது.
வெள்ளத் தணிப்பு சீரமைப்புப் பணிகளைத் தொடர்ந்து, லன்சாங்கிலிருந்து தெமர்லோ வரை சில போக்குவரத்து நெரிசல்கள் பதிவாகின.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 30, 2026, 10:27 am
8 ஆண்டுகளாக தேசியக் கொடியை விநியோகித்து தேசப்பற்றை பரப்பும் 64 வயது ஆர். ராதா
August 30, 2026, 10:27 am
நேப்பாளம் வெள்ளம்: மலேசியா காத்மாண்டுவின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது
August 30, 2026, 10:26 am
நீரின் மேலிருந்த 200 வீடுகள் எரிந்து சாம்பலாகின: மூவர் மரணம்
August 30, 2026, 9:29 am
சரவாக் மாநிலத்தின் பல மாவட்டங்களில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது
August 29, 2026, 11:01 pm
மடானி அரசு சூதாட்ட நடவடிக்கைகளை ஒருபோதும் ஆதரித்ததில்லை: பிரதமர்
August 29, 2026, 11:00 pm
