செய்திகள் மலேசியா
எனக்குத் தொடர்ந்து பொறுப்பு வழங்கப்பட்டால், ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் மக்களுக்கே திருப்பி அளிக்கப்படும்: பிரதமர்
பெர்மாத்தாங் பாவ்:
நாட்டை வழிநடத்த எனக்கு தொடர்ந்து பொறுப்பு வழங்கப்பட்டால், அதிகார துஷ்பிரயோகம், ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளின் மூலம் சேமிக்கப்படும் தொகையை, குறிப்பாக மாணவர்கள், பட்டப்படிப்பு மாணவர்களுக்குத் திருப்பி அளிக்கப்படும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை உறுதியளித்தார்.
நாடு அரசியல் ரீதியாக நிலையானதாகவும் அமைதியானதாகவும் இருப்பதை உறுதி செய்வதோடு, நாட்டை மேம்படுத்துவதற்காக மக்கள், குறிப்பாக இளைஞர்களை ஒன்றிணைந்து செயல்படுமாறு அவர் அழைப்பு விடுக்கிறார்.
அதிகார துஷ்பிரயோகம், ஊழலைத் தடுப்பதற்கான முயற்சிகள் முக்கியமானவை, ஏனெனில் அதன் மூலம் சேமிக்கப்படும் பணத்தை மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்தலாம்.
எனக்கு தொடர்ந்து பொறுப்பு வழங்கப்பட்டால், சேமிக்கப்படும் பணத்தை மாணவர்கள், இளங்கலை பட்டதாரிகள் மற்றும் மக்களுக்குத் திருப்பிக் கொடுக்க முடியும். இந்த நாடு ஏழ்மையானது அல்ல.
மலேசியாவிடம் போதுமான வளங்கள் உள்ளன.
மேலும் நாட்டின் வருவாயை சில தரப்பினர் கொள்ளையடிக்க அனுமதிக்கக் கூடாது
பெர்மாத்தாங் பாவில் நடைபெற்ற சஹாபாத் மடானி 2026 நிகழ்ச்சியில் பேசும்போது கூறினார்.
நிறுவனங்கள், அமைச்சகங்கள் அல்லது அமைப்புகளை நிர்வகிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட தனிநபர்கள், தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏமாற்றித் தங்களுக்கு லாபம் ஈட்டுவதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 30, 2026, 10:27 am
8 ஆண்டுகளாக தேசியக் கொடியை விநியோகித்து தேசப்பற்றை பரப்பும் 64 வயது ஆர். ராதா
August 30, 2026, 10:27 am
நேப்பாளம் வெள்ளம்: மலேசியா காத்மாண்டுவின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது
August 30, 2026, 10:26 am
நீரின் மேலிருந்த 200 வீடுகள் எரிந்து சாம்பலாகின: மூவர் மரணம்
August 30, 2026, 9:29 am
சரவாக் மாநிலத்தின் பல மாவட்டங்களில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது
August 29, 2026, 11:03 pm
நீண்ட விடுமுறையால் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது
August 29, 2026, 11:01 pm
மடானி அரசு சூதாட்ட நடவடிக்கைகளை ஒருபோதும் ஆதரித்ததில்லை: பிரதமர்
August 29, 2026, 11:00 pm
