நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டில் தீவிரமடையும் புகைமூட்டம்: ஶ்ரீ அமானில் புகைமூட்ட நிலைமை மோசமடைந்துள்ளது 

பெட்டாலிங் ஜெயா: 

நாட்டில் புகைமூட்டம் தீவிரமடைந்துள்ளதால் காலை வேளையில் நாட்டிலுள்ள சில பகுதிகளில் காற்றின் தர குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு செய்யப்பட்டன

அவ்வகையில் 29 இடங்களில் காற்றின் தரக்குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவானது. 

சரவாக் மாநிலத்தில் உள்ள ஶ்ரீ அமானில் காற்றின் தரக் குறியீடு அதிகளவில் பதிவானது. அப்பகுதியில் 223 ஆக குறியீடு பதிவு செய்து மிக ஆரோக்கியமற்ற நிலையாக பதிவானது 

கிள்ளான் பள்ளதாக்கில் செராஸ் பகுதியில் காற்றின் தர குறியீடு 160ஆக பதிவு செய்யப்பட்டது. ஷா ஆலாம் பகுதியில் 155 ஆகவும் புத்ராஜெயாவில் 154ஆகவும் பதிவு செய்யப்பட்டது. 

API அளவீடு 0 முதல் 50 வரை நல்ல காற்றின் தரத்தையும், 51 முதல் 100 வரை மிதமான தரத்தையும், 101 முதல் 200 வரை ஆரோக்கியமற்ற தரத்தையும், 201 முதல் 300 வரை மிகவும் ஆரோக்கியமற்ற தரத்தையும், 300-க்கு மேல் அபாயகரமான தரத்தையும் குறிக்கிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset