நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அம்பாங்கில் உள்ள பொருட்கள் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து: எந்தவொரு உயிரிழப்பு சம்பவமும் நிகழவில்லை 

அம்பாங்: 

அம்பாங் தேசிய பள்ளிக்கு எதிரே இருந்த உணவு மற்றும் பொதுப் பொருட்கள் சேமிப்புக் கிடங்கு ஒன்று தீ விபத்தில் எரிந்து தீக்கிரையானது 

இந்த தீ விபத்து குறித்து தங்கள் தரப்புக்கு அதிகாலை 3 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை துறை அதிகாரி அஷ்ருல் ரிசால் உறுதிப்படுத்தினார். 

பண்டான் இண்டா, ஹங் துவா நிலையங்களில் இருந்து 18 தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர். இந்த விபத்தில் குறிப்பிட்ட உணவகமும் கிடங்கும் சுமார் 80 சதவீதம் வரை முற்றிலுமாக தீக்கிரையாகின.

தீயணைப்பு வீரர்கள் குழாய்கள் மற்றும் நீர்தாங்கிகளைப் பயன்படுத்தி தீயை அணைக்கும் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

அதிர்ஷ்டவசமாக, இந்தச் சம்பவத்தில் எந்தவொரு உயிரிழப்போ அல்லது காயமோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

தீயணைப்புப் படையினரின் விரைவான நடவடிக்கையால் அதிகாலை 4.42 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தொடர்ந்து முழுமையான மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு காலை 8.30 மணிக்குத் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset