செய்திகள் மலேசியா
சிபுவில் 5 வயது சிறுவன் கழுத்து அறுக்கப்பட்டு உயிரிழப்பு: சந்தேக நபர் ஒருவர் கைது
கோத்தா கினாபாலு:
சபா, சிபு பகுதியில் உள்ள ஜாலான் ரந்தாவ் பஞ்சாங் ஜெயாவில் உள்ள ஒரு வீட்டில் ஐந்து வயது சிறுவன் கழுத்து அறுக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் நாற்பதுகளில் வயதுடைய ஆண் சந்தேக நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் பாதிக்கப்பட்ட சிறுவனுடன் குடும்ப உறவு முறை உடையவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து மேலதிக விவரங்களை இதுவரையில் வெளியிடவில்லை.
மேலும், இந்தச் சம்பவத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்தும் எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
காவல்துறையினர் தற்போது சம்பவ இடத்தில் தங்களின் முதற்கட்ட விசாரணைகளைத் தீவிரமாகத் தொடங்கியுள்ளனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 29, 2026, 1:25 pm
தேசிய தின உரை: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை PICCஇல் உரையாற்றுகிறார்
August 29, 2026, 11:42 am
அம்பாங்கில் உள்ள பொருட்கள் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து: எந்தவொரு உயிரிழப்பு சம்பவமும் நிகழவில்லை
August 29, 2026, 11:39 am
டத்தோஸ்ரீ தனேந்திரனின் தந்தை ராமன் குட்டி காலமானார்
August 29, 2026, 11:32 am
டத்தோஶ்ரீ ஹம்சா சைனுடினின் தாயார் மறைவு: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இரங்கல்
August 29, 2026, 10:59 am
ஜாலான் சுங்கை பீசியில் ஆபத்தான முறையில் கார்களை ஓட்டிய சம்பவம்: ஏழு ஏமன் நாட்டு சந்தேக நபர்கள் கைது
August 28, 2026, 11:26 pm
திபெத்தில் 36 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்
August 28, 2026, 11:06 pm
