நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திபெத்தில் 36 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

புத்ராஜெயா:

சீனாவின் திபெத்தில் உள்ள நேப்பாள-சீன எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம், நிலச்சரிவுகளில் இருந்து மொத்தம் 36 மலேசியர்கள் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அவர்களின் அடையாளங்கள், நிலை ஆகியவை சீன அதிகாரிகளுடன் இன்னும் உறுதிப்படுத்தும் பணியில் உள்ளன என்று வெளியுறவு அமைச்சின் துணைச் செயலாளர் ஜெனரல் (இருதரப்பு உறவுகள்) சையத் முகமது ஹஸ்ரின் தெங்கு ஹுசைன் கூறினார்.

மேலும், நேப்பாளத்தில் இன்னும் தொடர்பு கொள்ளப்படாத மலேசியர்களின் பட்டியலில் உள்ள 36 நபர்களுக்கும் இவர்களுக்கும் இடையே ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதைக் கண்டறிய அமைச்சு ஒரு சரிபார்ப்பை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

எங்களுக்கு இந்தத் தகவல் இப்போதுதான் கிடைத்துள்ளதால், நாங்கள் குறுக்குச் சரிபார்ப்பு செய்து வருகிறோம்.

நேப்பாளத்திலோ அல்லது திபெத்திலோ இன்னும் காணாமல் போன அல்லது மீட்கப்பட்ட நமது மக்களின் உண்மையான எண்ணிக்கை உட்பட, இதே போன்ற பெயர்கள் ஏதேனும் இருந்தால், நாங்கள் பின்னர் புதுப்பிப்போம் என்று அவர்  கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset