செய்திகள் மலேசியா
முறையான ஆவணங்கள் இன்றி வனவிலங்குகளை வைத்திருந்த சந்தேக நபர் கைது
கோத்தா பாரு:
முறையான ஆவணங்கள் இன்றி வனவிலங்குகளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் போலிசாரால் கைது செய்யப்பட்டார்
கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று வனவிலங்கு குற்றப்பிரிவு மற்றும் கடல்சார் போலிஸ் படை இணைந்து ஒரு வளாகத்தில் சோதனையை மேற்கொண்டனர்.
அந்தச் சோதனையின்போது முறையான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாகப் பாதுகாக்கப்பட்டு வந்த சில வனவிலங்கு இனங்கள் அதிகாரிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட அந்த வனவிலங்குகளில் BURUNG AYAM-AYAM, HELANG SIPUT மற்றும் சில பறவைகளும் அடங்கும்.
கைப்பற்றப்பட்ட அனைத்து வனவிலங்குகளின் மொத்த மதிப்பு சுமார் 36,350 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வளாகத்தில் வசித்து வந்த நபர் ஒருவர், இந்த விசாரணைக்கு உதவுவதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 2010-இன் கீழ் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 29, 2026, 1:27 pm
நாட்டில் தீவிரமடையும் புகைமூட்டம்: ஶ்ரீ அமானில் புகைமூட்ட நிலைமை மோசமடைந்துள்ளது
August 29, 2026, 1:25 pm
தேசிய தின உரை: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை PICCஇல் உரையாற்றுகிறார்
August 29, 2026, 12:29 pm
சிபுவில் 5 வயது சிறுவன் கழுத்து அறுக்கப்பட்டு உயிரிழப்பு: சந்தேக நபர் ஒருவர் கைது
August 29, 2026, 11:42 am
அம்பாங்கில் உள்ள பொருட்கள் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து: எந்தவொரு உயிரிழப்பு சம்பவமும் நிகழவில்லை
August 29, 2026, 11:39 am
டத்தோஸ்ரீ தனேந்திரனின் தந்தை ராமன் குட்டி காலமானார்
August 29, 2026, 11:32 am
டத்தோஶ்ரீ ஹம்சா சைனுடினின் தாயார் மறைவு: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இரங்கல்
August 29, 2026, 10:59 am
ஜாலான் சுங்கை பீசியில் ஆபத்தான முறையில் கார்களை ஓட்டிய சம்பவம்: ஏழு ஏமன் நாட்டு சந்தேக நபர்கள் கைது
August 28, 2026, 11:26 pm
