நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜாலான் சுங்கை பீசியில் ஆபத்தான முறையில் கார்களை ஓட்டிய சம்பவம்: ஏழு ஏமன் நாட்டு சந்தேக நபர்கள் கைது 

கோலாலம்பூர்: 

கோலாலம்பூர், ஜாலான் சுங்கை பீசி பகுதியில் ஆபத்தான முறையில் கார்களை ஓட்டியதாக ஏழு ஏமன் நாட்டைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் 23 முதல் 26 வயதுடைய அந்த நபர்களைப் பிணையில் விடுவித்துள்ளதாகப் போலீசார் தெரிவித்தனர்.

கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி அதிகாலை 12.30 மணியளவில் இரண்டு கார்கள் ஜாலான் சுங்கை பீசி வழியாகச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

அப்போது கார்களின் ஜன்னல்களில் அமர்ந்துகொண்டும், உடல்களை வெளியே நீட்டியபடியும் பயணிகள் ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஐவர் கெடாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மாணவர்களாகக் கல்வி கற்கின்றனர். மற்ற இருவர் பல்கலைக்கழகப் படிப்பை முடித்த பட்டதாரிகள் ஆவர்.

நண்பரின் திருமண நாளைக் கொண்டாடும் மகிழ்ச்சிக்காகவே இவர்கள் இந்த ஆபத்தான செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்பட்ட பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset