செய்திகள் மலேசியா
தேசிய தின உரை: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை PICCஇல் உரையாற்றுகிறார்
புத்ராஜெயா:
2026ஆம் ஆண்டு தேசிய தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நாளை புத்ராஜெயா PICCஇல் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறப்பு உரை நிகழ்த்தவிருக்கிறார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உரையின் போது அவர் பல முக்கிய புதிய திட்டங்களை அறிவிக்கவுள்ளார்.
மலேசிய மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் அவர்களின் கவலைகளைப் போக்கும் வகையில் இந்தச் செய்திகள் அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் அமைதியைக் காக்க அனைத்து குடிமக்களும் இன மற்றும் மத வெறுப்புணர்வுகளை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
நாட்டின் ஒற்றுமை உணர்வை மேலும் வலுப்படுத்தி இந்த ஆண்டு தேசிய தினக் கொண்டாட்டங்களைச் சிறப்பாகக் கொண்டாடுமாறு அவர் மக்களிடம் வலியுறுத்தினார்.
இந்தச் சிறப்பான உரையானது நாளை பிற்பகல் 3 மணி முதல் நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளது.
தொலைக்காட்சி, வானொலி மற்றும் உள்ளூர் ஊடகங்களின் ஆன்லைன் வலைத்தளங்கள் வழியாகவும் இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்படும்.
மேலும், முகநூல் போன்ற சமூக வலைத்தள தளங்கள் மூலமாகவும் பொதுமக்கள் இந்த உரையை நேரடியாகக் கண்டு களிக்கலாம்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 29, 2026, 1:27 pm
நாட்டில் தீவிரமடையும் புகைமூட்டம்: ஶ்ரீ அமானில் புகைமூட்ட நிலைமை மோசமடைந்துள்ளது
August 29, 2026, 1:26 pm
முறையான ஆவணங்கள் இன்றி வனவிலங்குகளை வைத்திருந்த சந்தேக நபர் கைது
August 29, 2026, 12:29 pm
சிபுவில் 5 வயது சிறுவன் கழுத்து அறுக்கப்பட்டு உயிரிழப்பு: சந்தேக நபர் ஒருவர் கைது
August 29, 2026, 11:42 am
அம்பாங்கில் உள்ள பொருட்கள் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து: எந்தவொரு உயிரிழப்பு சம்பவமும் நிகழவில்லை
August 29, 2026, 11:39 am
டத்தோஸ்ரீ தனேந்திரனின் தந்தை ராமன் குட்டி காலமானார்
August 29, 2026, 11:32 am
டத்தோஶ்ரீ ஹம்சா சைனுடினின் தாயார் மறைவு: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இரங்கல்
August 29, 2026, 10:59 am
ஜாலான் சுங்கை பீசியில் ஆபத்தான முறையில் கார்களை ஓட்டிய சம்பவம்: ஏழு ஏமன் நாட்டு சந்தேக நபர்கள் கைது
August 28, 2026, 11:26 pm
