நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அனைத்து வழியாகவும் கடிதம் அனுப்பப்பட்டது; டத்தோஸ்ரீ அன்வாருக்கு கடிதம் கிடைக்கவில்லை என்பது ஆச்சரியமளிக்கிறது: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு அனைத்து வழியாகவும் கடிதம் அனுப்பப்பட்டது.

ஆனால் அவருக்கு கடிதம் கிடைக்கவில்லை என்பது தமக்கு ஆச்சரியமளிப்பதாக மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

கடந்த ஆகஸ்ட் 24 தேதியிட்ட அதிகாரப்பூர்வ கடிதம், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் கிட்டத்தட்ட அனைத்து உத்தியோகப்பூர்வ, தனிப்பட்ட தரப்பினருக்கும் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், அது இன்னும் பிரதமருக்குக் கிடைக்கவில்லை என்பது ஆச்சரியம் தான்.

அந்நியத் தொழிலாளர் ஆட்சேர்ப்புத் திட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான ஆவணங்களை பிரதமர் அலுவலகம், அரசியல் செயலாளர், பிரதமரின் தனிப்பட்ட மின்னஞ்சல், அன்வாரின் தனிப்பட்ட வாட்ஸ்அப் எண் ஆகியவற்றுக்கு அனுப்பியதாக முன்னாள் மனிதவள அமைச்சர் கூறினார்.

தனக்கு இன்னும் கடிதம் கிடைக்கவில்லை என்று பிரதமர் கூறியது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

பதிவுக்காகச் சொல்கிறேன், நான் அதை பிரதமர் அலுவலகத்திற்கும், பிரதமரின் அரசியல் செயலாளருக்கும், பிரதமரின் தனிப்பட்ட மின்னஞ்சலுக்கும், பிரதமரின் தனிப்பட்ட எண்ணுக்கும் அனுப்பினேன்.

உண்மையில் அவரின் அரசியல் செயலாளரே தனக்குக் கடிதம் கிடைத்ததாக எனக்குப் பதிலளித்தார்.

இதனால் இவ்விவகாரத்தில் நான் ஆச்சரியமடைந்தேன்.

மேலும் அந்தக் கடிதத்தை அவரிடம் சேர்ப்பதற்கு வேறு என்ன வழியைப் பயன்படுத்தலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

மறைந்த துன் சாமிவேலு காலத்தின் போல நான் அவரது அலுவலகம் அல்லது வீட்டின் முன் வரிசையில் நிற்க விரும்பவில்லை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset