நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தோஸ்ரீ சரவணனின் கடிதத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்கத் தயார்: டத்தோஸ்ரீ அன்வார்

கோலாலம்பூர்:

அந்நியத் தொழிலாளர் ஆட்சேர்ப்புத் திட்டத்துடன் மஇகா துணைத் தலைவரைத் தொடர்புபடுத்தும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, டத்தோச்த் சரவணன் அனுப்பிய கடிதத்தை நான் இன்னும் பெறவில்லை.

இருப்பினும், அந்த ஆவணத்தின் உள்ளடக்கங்களை ஆய்வு செய்வதற்காக அதனை அதிகாரிகளிடம் ஒப்படைப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.

கடந்த ஆகஸ்ட் 24 தேதியிட்ட அந்தக் கடிதத்தை ஆகஸ்ட் 26 அன்று பிரதமருக்கு அனுப்பியதாக முன்னதாகக் கூறியிருந்த முன்னாள் மனிதவள அமைச்சரிடமிருந்து தனக்கு இன்னும் கடிதம் கிடைக்கவில்லை என்பதை டத்தோஸ்ரீ அன்வார் உறுதிப்படுத்தினார்.

செபராங் ஜெயாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

விசாரணை, வழக்குத் தொடரும் செயல்முறைகள் அந்தந்த அதிகார வரம்புகளுக்கு ஏற்ப நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, கடிதத்தின் உள்ளடக்கங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைப்பதாகக் கூறினார்.

அந்தக் கடிதத்திலிருந்து.அங்குள்ள அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது என்பதல்ல.

அதை விசாரிப்பதற்காக நான் எம்ஏசிசி அல்லது தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திற்கோ அனுப்புவேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset