நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நேபாளம் - சீனா எல்லைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு: காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 2,400ஐ தாண்டியுள்ளது 

காத்மாண்டு: 

நேபாளம் மற்றும் சீனாவில் வெள்ளப்பெருக்கு காரணமாக காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 2,400-ஐ தாண்டியுள்ளது.

சுனாமி போன்ற பெருவெள்ளம் கிராமங்களை அடித்துச் சென்றதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

மீட்புப் படையினர் சேற்றில் போராடி வருவதுடன் புதிய வெள்ள அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இதுவரை 586 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, சில உடல்கள் இந்தியா வரை அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

இந்தப் புதிய புள்ளிவிவரங்கள் நேபாள பேரிடர் அதிகாரசபையினால் வெளியிடப்பட்டுள்ளன. இதில் நீர்மின் நிலைய ஊழியர்கள் மற்றும் தீபெத்தின் கைலாஷ் மலை யாத்ரீகர்களும் அடங்குவர்.

காணாமல் போன தங்கள் உறவினர்களைத் தேடி குடும்பத்தினர் மருத்துவமனைகளில் கூடி வருகின்றனர்.

சுவர்களில் காணாமல் போனவர்களின் படங்களுடன் கூடிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

2015 நிலநடுக்கத்திற்குப் பிறகு நேபாளத்தில் நடந்த மிக மோசமான பேரிதராக இது கருதப்படுகிறது.

பனிப்பாறை சரிவு காரணமாக இந்த திடீர் பனி மற்றும் களிமண் பெருவெள்ளம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset